சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் பணியாளர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட விடயத்தை முடிவுக்கு கொண்டு வர சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விரும்புகிறது.எனினும், இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தை தொடர்ந்தும் சட்டரீதியில் முன்னெடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் குறித்த பெண் பணியாளரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக
ஆங்கில இதழ் ஒன்று கூறுகிறது.
குறித்த பெண் பணியாளர் தாம் கடத்தப்பட்டதாக கூறிய விடயம் தொடர்பில் முரண்பட்ட தகவல்கள் வெளியான நிலையிலேயே இதனை முடிவுக்கு கொண்டு வர சுவிஸ் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.எனினும், இது அரசாங்கத்துக்கு பாரிய பங்கத்தை ஏற்படுத்தும் செயல் என்ற அடிப்படையில் அரசாங்கம் விடயத்தை முன்னெடுத்து செல்வதாக குறித்த செய்தித்தாளில் குறிப்பிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக