18

siruppiddy

செப்டம்பர் 08, 2014

மாநாட்டில் சிறீலங்காவுக்கு மற்றொரு சவால்!!

இன்று ஆரம்பித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கம் மற்றுமொரு பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
சிறிலங்காவின் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பல அறிக்கை படுத்தவுள்ளன.
ஏற்கனவே இந்த முறை சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் புதிதாக சிறிலங்காவில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளால் காணாமல் போனோர் தொடர்பான அறிக்கைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் சமர்ப்பிக்கவுள்ளன.
காணாமல் போதல், காணாமல்போதலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருத்தல், காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு தீர்க்கமாக செயற்படாமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள், இதன் கீழ் முன்வைக்கப்படவுள்ளன.
ஏற்கனவே சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் இது தொடர்பான தங்களின் ஆதாரங்களையும், அறிக்கைகளையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சிறிலங்காவில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள், போர்க்குற்ற சாட்சிகள் அச்சுறுத்தப்படுதல் போன்ற விடயங்கள் குறித்தும் அறிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 05, 2014

சரத் பொன்சேகா சாட்சியமளிக்கத் தயார் !!

 
வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு நான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை -
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார்.
தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான விசாரணையோன்றுக்கு முகம் கொடுக்க நான் தயங்க மாட்டேனென்று கூறிய அவர், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று நிருபிக்க தான் தயாரென்றும் தெரிவித்தார்.

எனவே சர்வதேச விசாரணைக் குழுவுக்கு இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறியுள்ள கருத்தை தனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயக்கம் காட்டி வருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய சரத் பொன்சேகா, குற்றச் செயல்களில் ஈடுபட்டோர் மாத்திரமே இவ்வாறு தயக்கம் கட்டுவதாக தெரிவித்தார்.

மேலும் கருத்துக்களை தெரிவித்த முன்னாள் இராணுவத் தளபதி சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் தான் அதனை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த விசாரணையின் போது சாட்சியங்களை வழங்கும் நபர்கள் அதற்கான பிரதிபலன்களை முகம் கொடுக்க நேரிடுமென அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூட அண்மையில் இவ்வாறான கருத்தை முன்வைத்திருந்தார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 04, 2014

அரசியல் சாயம் பூசவேண்டாம் வெளிநாட்டு உதவிகளுக்கு

பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று காக்கைதீவில் அமெரிக்க உதவியுடன் ஏலவிற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது:
அமெரிக்க அரசு எமக்கு பல வழிகளிலும் பல வருடங்களாக உதவிகளைச் செய்து வருகின்றனர். நான் அரசியலுக்கு வர முன்னரே அவர்களோடு சேர்ந்து பல செயற்றிட்டங்களில் பங்குபற்றியிருந்தேன்.சட்டத்தரணிகள், நீதிபதிகள் மற்றும் வேறு பலருக்கு சட்டம் சம்பந்தமான  பயிற்சிகளும் வழங்க அவர்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தேன்.
ஆனால் அவர்கள் இங்கு வாழ்வாதார மேம்பாடுகள் தொடர்பிலான உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விடயம்.
நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள். எமக்கு பல விதமான தேவைகள் உள்ளன. அவற்றை நல்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலர் முன் வந்துள்ளனர். இவ்வாறு வழங்குகின்ற போது வடக்கிற்கு மட்டும் வழங்குகின்றார்கள் ஏன் தென்பகுதிக்கு வழங்குகின்றார்கள் இல்லை என விமர்சனங்கள் ஏற்படுவது மனதிற்கு வேதனையளிக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் நன்மை தேவை மற்றவர்களுக்கு அல்ல. ஆகவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என்று அரசுடன் சம்பந்தப்பட்ட சிலருக்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செப்டம்பர் 01, 2014

மஹிந்தவை கட்டுப்படுத்த முடியும் என பிரபாகரன் கருதினார்–


 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கருதினார் என முன்னாள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

துரித கதியில் ஈழத்தை எட்டுவதற்கு தேவையான சூழலை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், பிரபாகரன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஜனாதிபதியினால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளில், தமக்கு சாதக நிலைமை ஏற்படும் என புலிகள் கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி குறித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தப்புக் கணக்கே அவர்களின் பாரிய பின்னடைவிற்கான ஏதுவாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வடக்கு மக்கள் வாக்களிப்பில் பங்கேற்காமையே, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியை சந்திக்க ஏதுவாக அமைந்தது என ஐக்கிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருந்தால் சிவிலியன் இழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும், இதனால் இழப்புக்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாரியளவில் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்நோக்க தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னி கிழக்கு முன்னரங்கப் பகுதிகளில் இலங்கை அரச படையினர் பின்பற்றிய யுத்த தந்திரோபாயங்கள் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்கு பகுதியில் ஒரு விதமான யுத்த தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும், கிழக்கு பகுதியில் வேறும் ஓர் தந்திரோபாயம் பின்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

2008ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கிளிநொச்சியிலிருந்து வெளியேறியிருக்கக் கூடாது எனவும் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு மக்களுக்கு சேவையாற்றியிருக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னிக் கிழக்கு முன்னரங்கப் பகுதியில் யுத்த சூன்ய வலயம் அறிவிப்பது குறித்து புலிகளுடன் அரசாங்கம் எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை எனவும், இவ்வாறு தன்னிச்சையாக அரசாங்கம் யுத்த சூன்ய வலயம் பற்றி அறிவித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் யுத்த சூன்ய வலயத்தை புலிகள் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில் மற்றுமொரு யுத்த சூன்ய வலயத்தை அரசாங்கம் எதன் அடிப்படையில் அறிவித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்த வலயத்தில் சிக்கியிருந்த பொதுமக்களை பாதுகாக்க இராணுவத்தினர் எடுத்த முயற்சிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வைத்தியசாலைகள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது படையினர் நடத்திய தாக்குதல்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்hளர்.

ஆளில்லா உளவு விமானங்களின் மூலம் கள நிலவரங்களை அறிந்து கொண்டே படையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்.

ஆகஸ்ட் 31, 2014

ஜனவரி மாதம் 3ம் திகதி சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தல்


ஜனாதிபதித் தேர்தலை 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி அரசியல் சாசனத்திற்கமைய நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்ட போதிலும் நிச்சயமான திகதிகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. அரசாங்கத்தை ஆதாரம் காட்டி சிங்களப் பத்திரிகையொன்றே இவ்வாறு எதிர்வரும் ஜனவரி 3 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற எனத் தெரிவித்திருந்தது. அந்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது - ஜனாதிபதி தேர்தலை நடாத்த உச்ச நீதிமன்றின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி ஜனாதிபதி தேர்தல் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் இலங்கைக்கான விஜயம் ஒன்றை ஜனவரி மாத நடுப்பகுதியில் செய்யவுள்ளதால் அதற்கு முன்னதாக தேர்தலை நடாத்தி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஆகஸ்ட் 11, 2014

கணவரை ஒரு முறையாவது காட்டுங்கள் ; ஜானின் மனைவி

மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி உருக்கமாக வேண்டுகோள்
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான்  வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான்  இராணுவம் எனது கணவரை சரணடைய வைத்தது. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பாதிரியார் ஜோசெப் மைக்கல் உட்பட 40 பேருடன் தான் எனது கணவரும் சரணடைந்தார் எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் அவரை ஒரு முறையாவது காட்டுங்கள்  என கோரி ஆணைக்குழு முன்னால் விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப்பதிவின் இறுதிநாள்  பதிவு தற்போது மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்போதே அவரது மனைவி ஆணைக்குழு முன் மேற்கண்டவாறு கூறி கதறி அழுதார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

ஆகஸ்ட் 03, 2014

ஆரம்பமாகியுள்ள ஜெனீவாவில் இலங்கைமீதான சர்வதேச

இலங்கை குறித்த சர்வதேச விசாரணை ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது முறைப்பாடுகள்குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது:

சர்வதேச விசாரணை குழுவினர் தற்போது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு முறைப்பாடுகளை ஆராய்வதிலேயே கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த மாத இறுதிக்குள் முறைப்படியான விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் குற்றச்சாட்டுகளை வகைப்படுத்துவதே இதன் நோக்கம்.

மேலும் தங்களிடம் உள்ள தகவல்கள் தொடர்பாக ஸ்கைப் மூலமாக இலங்கையில் உள்ள சிலரிடம் விசாரணைக்குழுவினர் தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைக்குழுவினர் ஸ்கைப் மூலம் இலங்கையில் சிலரிடம் தொடர்பு –
 
மற்றைய செய்திகள்