18

siruppiddy

செப்டம்பர் 05, 2017

யுத்தகளத்தில் நிர்க்கதியான நிலையில் தமிழ்மக்களின் புகைப்படம்!!

இறுதி யுத்தத்தின் போது 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற  பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களானது இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதி யுத்தம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், ஆயிரக்கணக்கான பொது மக்கள் நிர்கதியான நிலையில் அகதிகளாக்கப்பட்டிருந்தனர். இவ்வாறான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவே தற்போது வெளியாகியுள்ளன.
இறுதி யுத்தத்தின் போது கையில் கிடைத்த உடமைகளுடன் பொது மக்கள் மீண்டிருந்த நிலையில், பொதுமக்களிடம் இருந்து இலத்திரினியல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை இராணுவத்தினர் 
கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீளவும் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்த கெமரா ஒன்றிலிருந்து இந்த புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஆகஸ்ட் 27, 2017

போதைவஸ்து கடத்தலை இல்லாதொழிக்க ஒரு வருட அவகாசம் கேட்கும் கடற்படைத் தளபதி ட்ரெவிஸ் சின்னையா

இலங்கை கடல் எல்­லையில் போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­துள்­ளன. எமக்கு ஒரு வரு­ட­காலம் அவ­காசம் தாருங்கள் முழு­மை­யாக நிறுத்­திக்­காட்­டு­கின்றோம் என கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா சவால் விடுத்துள்ளார்.இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து விரைவில் புதிய கப்­பல்கள் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தா­கவும்
 அவர் குறிப்­பிட்டார்.
கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா நேற்று கண்டி தலதா மாளி­கையில் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்­த­துடன் அஸ்­கி­ரிய, மல்­வத்து மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து ஆசி பெற்­றி­ருந்தார். இதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.
ஊடகவியலாளர்களிடம் தொடர்ந்து கருத்து வெளியிட்ட தளபதி;
இலங்­கையின் கடல் பாது­காப்பில் இலங்கை கடற்­படை அதிக அக்­க­றை­யுடன் செயற்­பட்டு வரு­கின்­றது. நாம் எமது கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்தி புதிய கப்­பல்­களை கொள்­வ­னவு 
செய்­ய­வுள்ளோம்.
அடுத்த மாதம் ஒரு கப்­பலை நாம் கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். அத்­துடன் இந்­தி­யா­விடம் இருந்து அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நவீன கப்­பலை கொள்­வ­னவு செய்­ய­வுள்ளோம். மேலும் மூன்று புதிய கப்­பல்கள் அடுத்த ஆண்டில் எமக்கு கிடைக்­க­வுள்­ளன. இவை எமது கடல் எல்லை பாது­காப்பை பல­ப்ப­டுத்த நாம் எடுக்கும் முயற்­சி­க­ளாகும்.
எமக்கு கடல் எல்லை பாது­காப்பை பலப்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் உள்­ளது. போதைப்­பொருள் கடத்தல் விட­யங்­களில் நாம் அதிக அச்­சு­றுத்­தலை எதிர்­கொண்டு வரு­கின்றோம். அதற்­கா­கவே நாம் இந்த கப்­பல்­களை கொள்­வ­னவு செய்ய வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்த செயற்­பா­டு­களை தடுக்க வேண்­டிய முயற்­சிகள் எம்­மிடம் உள்­ளன. எமக்கு ஒரு வருட காலம் தாருங்கள் நாம் முழு­மை­யாக இந்த செயற்­பா­டு­களை நிறுத்திக் 
காட்­டு­கின்றோம்.
இலங்கை கடற்­படை மீது பல்­வேறு குற்­றங்கள் கடந்த காலங்­களில் சுமத்­தப்­பட்­டன. எனினும் இவை தொடர்பில் நாம் அக்­கறை செலுத்தி வரு­கின்றோம். ஒழுக்கம் என்­பது முக்­கிய அம்­ச­மாகும். இந்த ஒழுக்­கத்தை வைத்­து­க்கொண்டு எதிர்­வரும் காலங்­களில் நாம் எமது கட­மை­களை
 முன்­னெ­டுப்போம்.
நடந்த விட­யங்கள் தொடர்பில் நாம் நட­வ­டிக்­கை­களை எடுப்போம். இதில் எவரும் சந்­தே­கம் ­கொள்ள வேண்­டிய அவசியம் இல்லையெனத்
 தெரிவித்த அவர்
இந்­திய கடற்­றொ­ழி­லா­ளர்கள் இலங்கை எல்லை குறித்த தெளி­வில்­லாமல் அத்­து­மீறி பிர­வே­சிக்­கின்­றனர்.
இந்த நிலையில் அவர்­க­ளுக்கு உதவும் வகையில் இலங்கை இந்­திய கடல் எல்லையை அடையாளப்படுத்தி அதனை அவர்கள் மீறும் போது எச்சரிக்கை சமிக்ஞையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த செயற்பாடுகளுக்காக புதிய இயந்திர படகுகளை இலங்கைக் கடற்படையுடன் இணைக்கவுள்ளதாகவும் அவர் மேலும்
 தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஆகஸ்ட் 10, 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் பதவியினை துறந்தார்

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது அமைச்சு பதவியினை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டத்தொகுதியில் 
இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு 
தெரிவித்தார்.
அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடன் தான் தனது அமைச்சுப்பொறுப்பில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜூலை 19, 2017

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.2017

யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    
அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்.  இருபதாவது  ஆண்டு நினைவஞ்சலி
.19.07.2017.இன்று அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவிகின்றோம் 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஜூலை 15, 2017

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100% உண்மை! நோர்வே அதிரடி அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும் 
அறிவித்துள்ளது.
மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார்.
அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டின் இறுதியில் விடுதலை புலிகளின் மீதான தடை நீங்க இருப்பதாகவும் உத்தியோகப்பூர்வமாக 
அறிவித்துள்ளது.
மேலும் 2018 போர் நடுத்துவதாக பிரபாகரன் தனது நட்பு நாடுகளுடன் தெரிவித்து ஆதரவையும் பெற்றுள்ளார்.
எதிர்வரும் இறுதி கட்ட போரில் இலங்கைக்கு ஆயுத உதவி மட்டுமே என அமெரிக்க மற்ற இலங்கை நட்புநாடுகள் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இறுதிக்கட்ட போர் நடைபெற போவதும் அதில் பிரபாகரன் அதீத பலத்துடன் இருப்பார்கள் என்பதும் இந்தியாவிற்கு தெரியும் எனவேதான் இந்தியா புலிகளின் விடயத்தில் அமைதிகாத்து
 வருகிறது.
போர் தொடங்கும் மூன்று மாதத்திற்கு மூன்பே பிரபாகரன் தனது நட்புநாடுகளுடன் உதவியுடன் வான்வழி தாக்குதல் நடத்தி இலங்கையில் ஒரு பகுதியை கைப்பற்றி போரை தொடங்குவார் எனவும்
 அறிவித்துள்ளது…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜூன் 27, 2017

வடமாகாண சபையில்மீண்டும் சர்ச்சை? இரு அமைச்சர்கள் முரண்படும்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஏற்படுத்தப்படும் புதிய ஆணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என வடமாகாண சபை அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளனர். Asian Tribune ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடமாகாண முதலமைச்சர் விசாரணை குழு ஒன்றை நியமித்துள்ளதாக 
கூறப்படுகிறது.
ஓய்வுப்பெற்ற நீதிபதி தியாகேந்திரன் தலைமையிலான நான்கு பேர் உள்ளடங்கிய இந்த குழு ஒருமாதக் காலத்தில் தமது அறிக்கையை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இவ்வாறான குழு ஒன்றின் நியமனம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை என குறித்த இரு அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவ்வாறான குழுவை நியமிப்பதற்கான அதிகாரம் முதலமைச்சருக்கு 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் கீழும் இல்லை.
மாகாணசபையின் செயற்குழுவுக்கே இந்த அதிகாரம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, சட்டவிரோதமான எந்த விசாரணைக் குழுவிலும் முன்னிலையாகப்போவதில்லை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிப்ரவரி 03, 2017

இந்திய மத்திய அரசினால் முதல்வருக்கு அச்சுறுத்தல்!

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இந்திய மத்திய அரசினால்.( பிரித்தானியா பின்னணியில் ) பல்வேறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வட மாகாண சபை பிரித்தானியாவின் தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபையுடன் (Kingston Borough Council) கடந்த வருட இறுதிப் பகுதியில் இணைந்திருந்தது. இது தொடர்பிலேயே இந்திய அரசாங்கத்தினால் அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைவதற்கு முன்னர் இந்தியாவின் முழுமையான அனுமதியை பெற்றுக் கொள்ளாமை தொடர்பில் முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள நாட்டின் நகர சபையுடன் இணைவதற்கு பதிலாக இந்திய மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தால், மிகவும் சாதகமான முடிவுகளை பெற்றிருக்க முடிந்திருக்கும் என முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர் ஊடாக இந்திய மத்திய அரசாங்கம், வடக்கு முதல்வருக்கு 
தெரிவித்துள்ளது.
தெற்கு லண்டனில், கிங்ஸ்டன் நகர சபை எல்லை, இலங்கைக்கு தொடர்புடைய பாரிய அளவு தமிழ் மக்கள் வாழும் பிரதேசமாகும்.
கடந்த வருடம் கிங்ஸ்டன் நகர சபை மற்றும் வட மாகாண சபை இணைந்து செயற்படுவதற்கு ஒப்பந்தம் ஒன்று 
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்ததிற்கமைய வட மாகாண சபையின் கல்வி, சுகாதாரம், தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு அவசியமான பயிற்சி வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்படவுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>