நவம்பர் 28, 2013
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு எழுச்சியுற நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்
லண்டனில் எக்ஸ்சல் மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு மிக எழச்சியான முறையில் நண்பகல் ஆரம்பமானது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரரானவர்களையும்,
வேறு இயக்கங்களில் இருந்து மாவீரரானவர்களையும் சேர்த்து இன்று அஞ்சலி செய்யப்படுவதாக விழாவின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
நவம்பர் 27, 2013
கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ மாவீரர் நாள்
கார்த்திகை 27ம் திகதி தமிழீழ மண்ணுக்காய் வித்தாகி விழிமூடிய புதல்வர்களை நினைவுறுத்தி உலகிலுள்ள பல நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகள் எழுச்சிகரமாக இடம்பெற ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்றன. தமிழீழ மாவீரர் நாள் – நவ-27
தமிழர்க்கு பூமிப் பந்தில் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்! –
தமிழினத்தின் வரலாற்றில் எத்தனையோ அரசர்களும் பேரரசர்களும் தோன்றி மறைந்துள்ளார்கள்.
இராசராச சோழனும் அவன் மகன் இராசேந்திர சோழனும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழப் பேரரசை நிறுவிய மன்னர்கள் ஆவர்.
இலங்கை மீது படையெடுத்து அதனைப் பிடித்து (கிபி 993 – கிபி 1077) ஆட்சி செய்தவர்கள். சோழர்களது ஆட்சி 84 ஆண்டுகள் நீடித்தது.
வங்கப் பெருங்கடலில் வலம் வந்த பேரரசர்கள் முதலாவது இராசராச சோழன், முதலாவது இராசேந்திர சோழன் ஆகியோரது கடற்படைக் கப்பல்களில் புலிக்கொடிகள் வானளாவப் பறந்தன.
அந்தப் பொற்காலத்தின் பின்னர் தேசியத் தலைவர் பிரபாகரனின் கடற்படைதான் புலிக் கொடிகளோடு வங்கக் கடலில் வலம் வந்தன.
உலக வரலாற்றில் கிரேக்கத்தின் மகா அலெக்சான்டர், பிரான்சின் சக்கரவர்த்தி நெப்போலியன் மாவீரர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.
தமிழினத்தின் வரலாற்றில் மாவீரன் என்ற பட்டத்தைச் சுமந்தவர் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவர்தான் மாவீரன் என்ற சொல்லுக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கியவர்.
தேசியத் தலைவர் என்றாலும் அது பிரபாகரன் ஒருவரையே குறிக்கும். வேறு யாரையும் குறிக்காது.
ஆங்கிலேயர் இந்தியாவைப் பிடித்து ஆண்ட காலத்தில் தமிழர்கள் படைகளில் சேர்க்கப்படவில்லை. காரணம் ஆங்கிலேயர் கணிப்பில் அவர்கள் வீரம் செறிந்த இனமாகக் கருதப்படவில்லை.
அந்த வசை மாவீரன் பிரபாகரன் பிறந்ததால் கழிந்தது.
தமிழினத்துக்கு இந்தப் பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம் முகவரி தேடித் தந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒருவரேதான்.
தமிழனைத் தெரியாதவர்களும் தலைவர் பிரபாகரனை தெரிந்து வைத்திருந்தார்கள்.
தமிழினம் இழந்த நாட்டை மீண்டும் போராடிப் பெறவேண்டும் அய்யனாவில் தமிழீழக் கொடி பறக்க வேண்டும் என்ற இலட்சியத்தோடு 30 ஆண்டு காலம் ஓய்வின்றிப் போராடியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
கடலிலும் தரையிலும் எத்தனை தாக்குதல்கள். எத்தனை ஊடுருவல்கள், எத்தனைப் போர்க்களங்கள். எத்தனை படையணிகள். உலகையே வியப்பில் ஆழ்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த மண்ணையும் அதில் வாழும் மக்களையும் உயிருக்கு மேலாக நேசித்தவர்.
தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்கள் கால்களில் பூட்டப்பட்ட அடிமை விலங்குகள் என்றோ ஒரு நாள் உடையும் தமிழீழம் பிறக்கும் என நம்பியவர். அந்த நம்பிக்கை வீண்போகாது.
இன்று தேசியத் தலைவர் பிரபாகரனது 59 ஆவது பிறந்த நாள்.
தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் மட்டுமே தமிழ் கூறும் நல்லுகம் எங்கும் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சிறப்பு வேறு யாருக்கும் இல்லை.
நவம்பர் 17, 2013
நினைவு முற்றம் சிதைப்பு, பழ.நெடுமாறன் கைது : !!
தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக சையும், காங்கிரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் இது குறித்து சீமான் பேசும் போது, தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர், நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்தப்படி பராமரித்து வந்த நிலையில், அதை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி நினைவுமுற்றத்தை அரசு அகற்றியுள்ளது.
இதை சட்டப்படி எதிர்கொண்டு இழந்த நிலத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.இதில் சீமான் மனைவி கயல்விழி, இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீமான், மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன், மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நவம்பர் 14, 2013
சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் -
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மதவாச்சி, பூனாவ உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது,
சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று,
எமது ஒற்றுமையை குலைக்காதே,
சனல் 4 வேண்டாம்
போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
சனல் 4 ஊடகவியலாளார்கள் வட பகுதிக்கு செல்லவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ஏ - 9 வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்படைந்தது.
இதில் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்ன, ஜெயதிலக உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கலும் மக்ரேவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலளார் கலும் மக்ரேவிற்கு எதிராக வாகனச் சாரதி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற வாகனத்தின் சாரதியே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
அனுராதபுரத்தில் மக்ரேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து, பிரேத்தியேக வாகனமொன்றில் மக்ரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு பணம் செலுத்தவில்லை என கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில், மக்ரேவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரே இந்த வாகனத்தை ஒழுங்கு செய்திருந்ததாகவும், இதனால் பொலிஸாரிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் மக்ரே தெரிவித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நவம்பர் 12, 2013
தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு கனடிய தமிழர்கள் தார்மீக ஆதரவு.
கொழும்பில் பொதுநலவாய உச்சி மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடகிழக்கில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பட்டங்களை நடாத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழர்களும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தார்மீக ஆதரவு வழங்கும் முகமாக தொடர் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இராணுவ மயப்படுத்தல், இனஅழிப்பு, நிலஅபகரிப்பு, காணாமல் போனவர்களின் விடயங்கள், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விடயங்கள், மற்றும் பெண்களிற்கு எதிரான பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட விடயங்களை கண்டித்தும், சர்வதேச போர்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்
வரும் நவம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை,
டொராண்டோவில் உள்ள ஸ்ரீலங்கா துணை தூதரகத்தின் முன்பாக (36 Eglinton Ave. West, Toronto, Intersection Eglinton & Yonge)
பிற்பகல் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து கனடிய தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ளனர்.
இம்முக்கியமான கட்டத்தில் இந்த ஆர்பாட்டதிற்கு அனைத்து கனடிய தமிழர்களும் வருகை தந்து தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
"இனப்படுகொலைகளின் தலைவன் மகிந்த பொது நலவாய நாடுகளின் தலைவனா?" முடிவு காண; வாரீர் அணி திரண்டு!!!
தொடர்புகளுக்கு,
கனடிய தமிழர் அமைப்புகள்-
416-888-1128 , நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.
416-281-1165 . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – கனடா
416-240-0078 , கனடியத் தமிழ் காங்கிரஸ்
416-917-8951 , நாம் தமிழர் - கனடா
416-402-9393 , கனடாத் தமிழர் இணையம்
மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன. பதிவு செய்வோருக்கு மட்டும். அதனால் ஆசனப் பதிவிற்கு முந்திக் கொள்ளுங்கள். 647 209 4100 , 416 240 0078
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











































