18

siruppiddy

நவம்பர் 17, 2013

நினைவு முற்றம் சிதைப்பு, பழ.நெடுமாறன் கைது : !!



தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச்சுவர் இடிப்பைக் கண்டித்து மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக சையும், காங்கிரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் இது குறித்து சீமான் பேசும் போது, தமிழ்ச் சமூகத்துக்காக உயிர் நீத்தவர்களை நினைவு படுத்தும் வகையில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டதும் பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டதும் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்த அவர், நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடத்தை ஒப்பந்தப்படி பராமரித்து வந்த நிலையில், அதை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி நினைவுமுற்றத்தை அரசு அகற்றியுள்ளது.

இதை சட்டப்படி எதிர்கொண்டு இழந்த நிலத்தை மீட்போம் என்று தெரிவித்தார்.இதில் சீமான் மனைவி கயல்விழி, இளைஞர் பாசறை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீமான், மதுரை மண்டல பொறுப்பாளர் வெற்றிக்குமரன், மதுரை மாவட்ட, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக