18

siruppiddy

நவம்பர் 14, 2013

சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் -



இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மதவாச்சி, பூனாவ உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00  மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது,

சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று,
எமது ஒற்றுமையை குலைக்காதே,
சனல் 4 வேண்டாம்
போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

சனல் 4 ஊடகவியலாளார்கள் வட பகுதிக்கு செல்லவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ஏ - 9 வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்படைந்தது.

இதில் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்ன, ஜெயதிலக உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கலும் மக்ரேவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலளார் கலும் மக்ரேவிற்கு எதிராக வாகனச் சாரதி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற வாகனத்தின் சாரதியே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
அனுராதபுரத்தில் மக்ரேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து, பிரேத்தியேக வாகனமொன்றில் மக்ரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு பணம் செலுத்தவில்லை என கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில், மக்ரேவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரே இந்த வாகனத்தை ஒழுங்கு செய்திருந்ததாகவும், இதனால் பொலிஸாரிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் மக்ரே தெரிவித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக