18

siruppiddy

ஏப்ரல் 30, 2015

மரண தண்டனையின் பின்னணியில் பரபரப்புத் தகவல்?

அவுஸ்திரேலிய பொலிஸாரின் துப்பறியும் தகவல் இந்தோனேசியாவிற்கு கிடைந்ததே மயூரன்- அன்ட்ரூசான் உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலிய மத்திய பொலிஸார், தமது நாட்டில் அவர்களது குற்றச் செயலைத் தடுத்து நிறுத்தாமல் விட்டதுடன், அவர்கள் இந்தோனேசியாவிற்குச் சென்ற பின்னர் அந்நாடு மரண தண்டனையை வழங்குகிறது என்று தெரிந்தும் அந்நாட்டுக்கு இவர்கள் பற்றி தகவல்களை வழங்கியிருந்தது.
மயூரன்- சான் உட்பட ஏனையவர்களின் மரணத்தில் புதைந்துள்ள வெளிவராத பல தகவல்கள் தொடர்பில் லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரான பாலா விக்னேஸ்வரன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 29, 2015

தொலைபேசியில் பசிலய் விடுதலை செய்யுமாறு அச்சுறுத்தல்

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் சிலருக்கு தொலைபேசி ஊடாக இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளர் இது குறித்து பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரகதி லக்மினி அபேநாயக்கவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 26ம் திகதி 4.25 மற்றும் 4.30 மணிகளில் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டு கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெசில் ராஜபக்சவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கடுமையான வார்த்தைகளினால் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசி அழைப்புக்கள் பற்றிய விபரங்களை திரட்டி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொரளை பொலிஸ் நிலையம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது

யாழ்.மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்ககூறியது யார்?: விமலை மடக்கிய ரணில்!
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்கவிடாமல தடுக்குமாறு பொலிஸ் அதிகாரிகளிற்கு உத்தரவிட்டது யார் என விமல் வீரவன்சவை பார்த்து கேட்டு, அவரை வாயடைக்க வைத்துள்ளார் ரணில். 
நேற்று பாராளுமன்றத்தில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்று எம்.பிக்களின் சிறப்புரிமை தொடர்பான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது உரையாற்றிய விமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களை வேட்டையாட பொலிஸ் அதிகாரியொருவரை நியமித்து, அவருக்கு அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவி தரலாமென அரசு வாக்களித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ரணில், “கிடைக்கும் முறைப்பாடுகளிற்கு அமைவாகவே விசாரணைகள் நடக்கின்றன. சில முறைப்பாடுகள் தவறென கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி எம்.பிக்களை வேட்டையாட வேண்டிய தெவை எமக்கில்லை.
ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மக்களை மைத்திரிக்கு வாக்களிக்க விடாது தடுக்குமாறும், அப்படி தடுத்தால் பதவி உயர்வுதருவதாகவும் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு வாக்களித்தது யார்? நானா?” என விமல் வீரவன்சவை பார்த்து கேட்டார்.  இதற்கு பதிலளிக்க முடியாமல் அசடுவழிந்தபடி விமல் உட்கார்ந்திருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 28, 2015

வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கை!

வெள்ளை வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான்களில் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்பு செயற்பட்டாளர்கள் கடத்தி காணாமல் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதுகாப்பு துறைசார் பிரதானிகள் மூவர் பற்றிய இரகசிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இந்த அறிக்கை பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், முப்படையினர், பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இந்த பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.
வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவு பிரதானிகளில் மூன்று பேரில் இருவர் ஒய்வு பெற்றுக் கொண்டுள்ளனர்.
இராணுவ மேஜர் ஒருவர் தொடர்பிலும் தனியான அறிக்கையொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 27, 2015

யோசித ராஜபக்ச சிராந்தி ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவையும், மகன் யோசித ராஜபக்சவையும், அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிராந்தி ராஜபக்சவுக்கு எதிராகவும், யோசித ராஜபக்சவுக்கு எதிராகவும், ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு ஏற்கனவே  விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், அடுத்த சில நாட்களுக்குள் இவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் 
விவாதிக்கப்படவுள்ள, 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ள நிலையில், இவர்களைக் கைது செய்வதன் மூலம், 19வது திருத்தத்தை நிறைவேற்றாமல் தடுக்க ஐதேக முனைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 26, 2015

பணியாளர்கள் மக்களிற்கே விசுவாசமாக இருக்கவேண்டும்!!!


யாழ்.மாவட்டத்தினில் முன்னர் இருந்த நிர்வாகத்தில் இடம்பெற்ற ஊழல்களையும் புதிய அரச அதிபர் சரி செய்ய வேண்டும். இதனூடாக யாழ்ப்பாணத்தில் சிறந்த நிர்வாகம் ஒன்றினையே நாம் அரச அதிபர் ஊடாக எதிர்பார்க்கின்றோம்.   நாங்கள்  கொழும்பிலும், வடக்கிலும் எவ்வாறானதொரு காத்திரமான நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோமோ அதேபோல யாழில் சிறந்த நிர்வாகம் அமைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரன்.
பொருளாதார அமைச்சின் கீழ் 
வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி யாழ். கோப்பாய் பிரதேச செயலகர் பிரிவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.   அவர் மேலும் தெரிவிக்கையில்,   இன்றைய இந்த நிகழ்விற்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 
 கிராம மக்கள்  கலந்து கொள்ளக் கூடாது என முன்னாள்  அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா மற்றும்  அவருடன் இயங்கியவர்கள் பத்திரிகை செய்தியை கொடுத்துள்ளனர்
ஆனால் நீங்கள்  அரச உத்தியோகத்தர்களே. எனவே மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்கள் , அரசுக்கு கடமைப்பட்டவர்கள், அரசு கூறும் வேலைகளை நீங்கள்  செய்ய வேண்டும்.
   சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கட்சிக்கு வேலை செய்பவர்கள் அல்லர். ஆனாலும் இங்கு கட்சிக்கு வேலை செய்வதனையே நாங்கள் பார்க்கின்றோம். கட்சிக்கு வேலை செய்யாது மக்களுக்கு சேவை செய்யுங்கள் .   மக்களாகிய எங்களது வரிப்பணத்தில் தான்  நீங்கள் சம்பளம் பெறுகின்றீர்கள் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் . நீங்கள்  அந்த வரிப்பணத்திற்கு துரோகம் செய்வது என்பது தமிழ் 
 மக்களுக்கு செய்யும்  துரோகமாகும்.
எதிர்வரும்காலத்திலாவது உத்தியோகத்தர்கள் போல நடந்து கொள்ளுங்கள். மேலும் தற்போது ஆட்சி மாறியுள்ளது.  கொழும்பில் பல்வேறு பட்ட ஊழல் செயற்பாடுகள் இடம்பெற்றதாக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டு வருகின்றன.   ஆனால் வடக்கு மாகாணத்தில்
 என்ன நடக்கின்றது? இங்குள்ள ஊழல்கள் குறித்து யார் பேசுகின்றனர்? இ.போ.ச வின்  வடக்கு மாகாணத்திற்கு என பொறுப்பான ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.   அவருக்கு மேல் அதிகரித்த ஊழல் குற்றச்சாட்டுக்கள். இலங்கையில் உள்ள 12 போக்குவரத்து பிராந்தியங்கள் இருக்கின்றன. அதில் 11 பிராந்திய தலைவர்களையும்  மாற்றிவிட்டனர்.
  ஆனால் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் மாற்றவில்லை.  அதற்கு அமைச்சர் ரிசாட் பதியுதினே காரணம்.    எனினும்  அவரது ஊழல் என்பது பல இலட்சங்கள். இருப்பினும் குறிப்பிட்டவரை மாற்றுவதற்கு அமைச்சருக்கும் முடியவில்லை. போக்குவரத்து சபையின்  தலைவருக்கும் முடியாதுள்ளது.    இருப்பினும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அண்மையில் குறித்த உத்தியோகத்தர் மாற்றப்பட்டார்.
ஆனாலும் அவருக்கு முக்கிய பதவி ஒன்று வழங்க வேண்டும்  என்பதற்காக வடக்கு மாகாண போக்குவரத்து சாலை இரண்டாக பிரிக்கப்பட்டது.   தமிழ் மக்கள்  மாத்திரம் ஊழல் எல்லாத்தையும் ஏற்றுக் கொள்ள முடியுமா? தமிழ் மக்களுக்கு என்ன தலைவிதியா? தமிழ்  மக்களுக்கு சரியான நிர்வாகம் கிடைக்க வேண்டாமா? இங்கு வருபவர்கள்
 கொள்ளையடித்துச் செல்ல முடியுமா?   இவை எதுவும் எதிர்வரும் காலத்தில் நடைபெறக்கூடாது . 
இதேவேளை கடந்த காலத்தில் பல ஊழல் சம்பவங்கள்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றன. எனவே புதிய அரச அதிபரின் நிர்வாகத்தில் இவை நடைபெறக் கூடாதெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஏப்ரல் 22, 2015

பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமிக்க வேண்டும் - கோத்தாபய !!!

நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
“மைத்திரிபால சிறிசேன அதிபராக ஆறு ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அதனைத் தொடர வேண்டும்.
ஆனால், அவர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை பி்ரதமராக நியமிக்க முடியும்.
அவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், இலக்குகளை வெல்லும் உறுதி கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும்.
மகிந்த ராஜபக்சவை இலங்கையர்கள் 
விரும்புகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் அவருக்கு 5.8 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஒரு பக்கத்தில் பிரதமராக இருந்து ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை நடத்துகிறார். இன்னொரு பக்கத்தில், சந்திரிகா குமாரதங்க, சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் அரசாங்கத்துக்குள் அதிகாரம் செலுத்துகின்றனர்.
எனினும், அரசாங்கம் செயற்படு நிலையில் இல்லை என்று மக்கள் உணர்கின்றனர்.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட எல்லா அபிவிருத்தித் திட்டங்களும் முடங்கிப் போயுள்ளன.
அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், கட்டுமானத்துறையில் பணியாற்றிய ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து போயுள்ளனர்.
இதேநிலையை நீடிக்க அனுமதித்தால்,  ஒட்டுமொத்த பொருளாதாரமுமே சரிந்துவிடும். அது மிகவும் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நான் மட்டும் வெற்றி கொள்ளவில்லை. முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்யாதவாறு கொழும்புக்கு ஒரு புதிய முகத்தைக் கொடுத்தேன்.
தானே போரை வெற்றி கொண்டதாக சரத் பொன்சேகா இந்தியாவில் தெரிவித்தார். ஆனால், அவர் இராணுவத்தில் 30 ஆண்டுகள் இருந்தார். ஆனால் அப்போது போரை வெற்றிகொள்ளத் தவறியிருந்தார்.
நாங்கள் (ராஜபக்ச சகோதரர்கள்) பதவிக்கு வந்த பின்னரே, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.  அதற்கும் கூட 3 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சந்திரிகா குமாரதுங்க தானே 75 வீதமான போரை வெற்றி கொண்டதாக கூறியிருந்தார். ஆனால் அவரது பதவிக் காலத்தில், எந்த பிரதான வெற்றிகளும் அடையப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>