
ஐரோப்பிய நாடுகளுக்கு சிறிலங்கா மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் ஜூன் மாதம் 26ம் திகதி இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்கா மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதாகவும், முறைகேடான வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா மீனவர்கள், சர்வதேச கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதாகவும்,...