லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல தமிழர்கள் கலந்துகொண்டார்கள். லண்டனில் இன்று முக்கியமான கூட்டம் ஒன்று நடைபெற்று முடிவடைந்துள்ளது. வரும் காமன்வெலத் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவதா இல்லையா என்று இங்கு ஆராயப்பட்டுள்ளது. இக் கூட்டம் லண்டனில் நடைபெற்றவேளை இலங்கையில் இம் மாநாட்டை நடத்தக்கூடாது என்று, சில நாடுகள் கூறியிருந்தது. இதில் கனடாவும் அடங்கும். இக் கூட்டம் நடைபெற்றவேளை இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஈழத் தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே நடத்தினார்கள். இக் கூட்டமானது பிரித்தானிய தமிழர் பேரவையினரால்( BTF) ஒழுங்குசெய்யப்பட்டது.
கூட்டம் நடைபெற்று முடிந்தவேளை திடீரென வெளியே வந்த கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர், ஈழத் தமிழர்களோடு கை குலுக்கினார். அவர் சிலர் கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார். இப் போராட்டத்தில் சனல் 4 ஆவணப்படத் தயாரிப்பாளர் காலம் மக் ரே மற்றும் எழுத்தாளர் பிரான்சிஸ் கரிசன் ஆகியோரும் கலந்துகொண்டனர். கனடா வெளிவிகார அமைச்சர் அவர்களுடனும் கலந்துரையாடினார். தமிழர்களை தாம் பெரிதும் மதிப்பதாகவும், இலங்கையில் காமன்வெலத் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுவதை தாம் விரும்பவில்லை என்றும் அவர் நேரடியாகவே தமிழர்களிடம் தெரிவித்திருந்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக