18

siruppiddy

ஏப்ரல் 13, 2013

கார் - லாரி மோதியதில் ஐந்து?


பிரிட்டனில் லேஸ்பியில் உள்ள A18 நெடுஞ்சாலையில் நிசான் பிரிமேரா(Nissan Primera) என்ற கார் எதிரே வந்த லாரி மோதியதில் விபத்துக்குள்ளானது.
இதில் அந்த காரில் வந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக ஹம்பர்சைட்(Humberside) பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் சாலையில் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இவ்விபத்து குறித்த அதிகாரி ட்ரேசி பிராட்லீ(Tracy Bradley) கூறுகையில், டர்ஹாம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் வந்ததாகவும், இவர்களின் மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும், மற்ற இருவர் கிரிம்ஸ்பியில்(Grimsby) உள்ள இளவரசி டயானா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து, பன்னிரண்டு ஆண்டுகளாகவே அந்த இடம் விபத்து மிகுந்த இடமாக இருக்கிறது என்று விபத்து நடந்த இடத்திற்கு அருகில் குடியிருக்கும் ஸ்டூவர்ட் க்ரீஸ்(Stuart Creese) என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹம்பர்சைட் நகர் காவல்துறையினர், விபத்து நடந்தபொழுது அந்த இடத்தில் இருந்தவர்களை சாட்சி சொல்ல வரும்படி அழைப்பு விடுவித்துள்ளனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக