இளவரசி கேத்ரின் அரை நிர்வாண போட்டோ பத்திரிகைகளில் வெளியான விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. பிரான்சில் மூவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர், அரை நிர்வாண போட்டோவை வெளியிட்ட பத்திரிகையின் தலைமை பப்ளிஷர் ! பெயர் அறிவிக்கப்படாத போட்டோகிராபரால், டெலாஸ்கோபிக் கேமரா கொண்டு இளவரசியின் அரை நிர்வாணப் படங்கள் எடுக்கப்பட்டன என்ற பரபரப்பு குறிப்புடன் வெளியான போட்டோக்கள் அவை. இந்த போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர், இவற்றை விற்க முயன்றபோது, பிரிட்டிஷ் பத்திரிகைகள் வாங்க மறுத்திருந்தன.
பிரெஞ்ச் செலிபிரிட்டி சஞ்சிகை Closer, இந்த போட்டோக்களுக்கு பெரிய விலை கொடுத்து வாங்கி பிரசுரித்து, ஒரே நாளில் பிரபலத்தின் உச்சிக்கு சென்றது. அதையடுத்து, அரச குடும்பத்தினர், அந்த பத்திரிகை குரூப் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்தப் போட்டோக்களை எடுத்த போட்டோகிராபர் யார் என்பதை வெளியிட முடியாது என மறுத்து வந்தது, பத்திரிகை. ஆனால், பிரெஞ்ச் கோர்ட் உத்தரவுப்படி போட்டோகிராபர்களை பிரெஞ்ச் விசாரணை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது, Closer சஞ்சிகையின் தலைமை பப்ளிஷர் Ernesto Mauri, மற்றும் குறிப்பிட்ட போட்டோவை எடுத்த ஒரு போட்டோகிராபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற தகவலை பிரெஞ்ச் டி.வி. சேனல் TF1 இன்று வெளியிட்டுள்ளது.போட்டோகிராபரின் பெயர், வெளியிடப்படவில்லை. ஆனால், மற்றொரு பெண் போட்டோகிராபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். Valérie Suau என்ற பெயருடைய இவர், இளவரசி கேத்ரினை பீச்சில் நீச்சலுடையில் போட்டோ எடுத்தவர். இவரது பெயர், வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் விசாரணைகள், தண்டனையில் போய் முடியும் என்று சொல்ல முடியாது. கோர்ட், வெறும் எச்சரிக்கையுடன்கூட விட்டு விடலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக