18

siruppiddy

பிப்ரவரி 27, 2014

அரசாங்கத்திற்கு 2000 ரூபாய் வரி: அனுரகுமார.,

இறந்தாலும் அரசாங்கத்திற்கு 2 ஆயிரம் ரூபாவை வரியாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், குழந்தை ஒன்று பிறக்கும் போதும் அரசாங்கத்திற்கு வரியை செலுத்த வேண்டியுள்ளது. குழந்தை பிறந்ததும் அரசாங்கத்திற்கு 300 ரூபாவை செலுத்த வேண்டும். இதனால் பிள்ளைகள் பிறக்கும்...

பிப்ரவரி 25, 2014

மனித உரிமை அமைப்புக்களின் நடவடிக்கைக்கு திசர சமரசிங்க

அவுஸ்திரேலிய மனித உரிமை மற்றும் அகதிக் கோரிக்கையாளர் ஆதரவு அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மனுஸ் தீவுகளில் கடமையாற்றி வரும் இலங்கை படையதிகாரி ஒருவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டிருந்தன. எனினும், இவ்வாறு முன்னாள் இராணுவ அதிகாரிக்கு எதிராக கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தில் கடமையாற்றியிருந்தார்...

பிப்ரவரி 23, 2014

உக்ரைன் ஜனாதிபதி தலைநகரை விட்டு தப்பி ஓட்டம்

உக்ரைனில் போராட்டக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாகி வருவதால், ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் தலைநகரை விட்டு தப்பிஓடி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைனில் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறை சம்பவங்களாக மாறி வருகிறது. சிலநாட்களுக்கு முன் தலைநகர் கீவில் உள்ள சதுக்கத்தை மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 75 பேர் பலியாகியுள்ளனர்,...

பிப்ரவரி 21, 2014

மீண்டும் படைகளுக்கு காணி பறிப்பு; நுணாவிலில் சுவீகரிப்பு

 யாழ்.மாவட்டத்தில் மீண்டும் இராணுவமுகாம்களுக்கான காணி சுவீகரிப்பு அறிவித்தல்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. நுணாவிலில் இவ்வாறு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் 7 பேரும் அவற்றை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது. யாழ்.மாவட்டத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு மாத காலத்தினுள், இராணுவம் மற்றும் கடற்படைக்கான காணி சுவீகரிப்பு...

பிப்ரவரி 10, 2014

மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பம்

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ம் திகதி மன்னார் பகுதியில் நீர்க்குழாய் பொருத்துவதற்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதனையடுத்து தொடர்ச்சியாக அப்பகுதி தோண்டப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.இதனைத்தொடுந்து கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டன.இதுவரையில் 19 தடவைகள் குறித்த திருக்கேதிஸ்வரம் மனித புதை குழி தோண்டப்பட்டு, 55 மனித எலும்புக்கூடுகள்...

பிப்ரவரி 09, 2014

விசாரணை நடத்தும் அக்கறை மகிந்தவுக்கு இல்லை:

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற வெளியாகியுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தும் அக்கறை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கிடையாது என இண்டர்நேஷனல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.அண்மையில் தீ்ட்டிய ஆசிரியர் தலையங்கத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவரது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் என்பன அவர் விமர்சனங்களை பொறுத்து கொள்ள தயாராக இல்லை என்பதை வெளிகாட்டுவதாகவும்...

பிப்ரவரி 06, 2014

சிறிலங்கா துணை துதுவராலயம் முன்பாக நடைபெற்ற போராட்டம்

கனடிய தமிழர் தேசிய அவை தொடர்ச்சியாக நடத்தி வரும் தொடர் கவன ஈர்ப்பு போராட்ட வரிசையில், மூன்றாம் நாள் கவனஈர்ப்புப் போராட்டம் பெப்ரவரி 4ம் திகதி கடும் குளிரான கால நிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான தமிழர்களால் மிகுந்த எழுச்சியோடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதான சந்திகளில் ஒன்றான யங் மற்றும் எக்ளிங்டன் சந்திப்பிற்கருகில் 36 எக்ளிங்டன் வீதி மேற்கில் அமைந்துள்ள சிறிலங்கா துணைத் தூதராலயத்திற்கு  முன்பாக பி. ப. 3.00 மணி முதல்...

பிப்ரவரி 02, 2014

சிறுபான்மையினர் உரிமைகளை பெற சிங்களவர்கள் தலையிட?!

இலங்கையின் சிறுபான்மையினர் சுயநிர்ணய உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடி வந்தனர் எனவும் அதனை பெற்றுக் கொடுக்கவும் முன்னோக்கி கொண்டு செல்லும் சிங்கள சமூகம் தலையிட வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுபான்மை மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க சிங்கள சமூகம் தலையிடுவதன் ஊடாக உண்மையான சமாதானத்தை...