18

siruppiddy

மே 28, 2014

இலங்கைமீது தீவிர அவதானம்

நவிப்பிள்ளையின் அலுவலகம் இலங்கையின் கடந்தகால, தற்கால மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான தண்டனை, பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கப்பாடு ஆகியவை குறித்து தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது ஐ.நா. மனித உரிமைகள் சபை.   கடந்த ஏழு வருடங்களாக இலங்கையின் போர் விவகாரம் தொடர்பான விடயங்களை ஆய்வுக்கு உட்படுத்திவரும் ஐ.நா. செயலகம், சர்வதேச சமூகத்தோடும் ஐ.நா. மனித உரிமைகள் சபையோடும் இணைந்து தொடர்ந்தும் இக்கண்காணிப்பை மேற்கொள்ளும்...

மே 26, 2014

காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது

த.தே.ம.முன்னணி அமைப்பாளரும் புலிகளுக்காக தகவல் சேகரித்தவராம்!? கிளிநொச்சியில் சிறிலங்கா காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர், தங்கவேல் ஜெகதீஸ்வரன் சிறிலங்காப் படையினருடன் உறவாடி அவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டியதாக சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது. கிளிநொச்சி மருத்துவமனையில் தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றும் இவர், சிறிலங்கா படையினருடன் நட்புறவு கொண்டு பாதுகாப்பு கட்டமைப்புகளுக்குள்...

மே 25, 2014

சர்வதேச விசாரணையில் சிக்க வைக்க அமெரிக்கா புதிய தந்திரோபாயம்?

இலங்கையை சர்வதேச விசாரணைப் பொறிமுறையில் சிக்க வைக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய தந்திரோபாயம் ஒன்றை முன்னெடுத்து வருவதாக இலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையியின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட உள்ள விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக முன்னாள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கொபி அனானை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இராஜதந்திரியை...

மே 18, 2014

பாலச்சந்திரனை கொல்லாமல் விட்டிருக்கலாம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்யாமல் விட்டிருக்கலாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின் பின்னர் உயிருடன் பிடிபட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை இராணுவத்தினர் கொடூரமான முறையில் கொன்றொழித்தனர்.இதே போன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனும் மனம் பதைபதைக்கும் வண்ணம்...

மே 16, 2014

சிறிலங்கா கடும் பாய்ச்சல் பிரித்தானியாவுக்கு எதிராக : நாடுகடந்த தமிழீழ அரசாங்க மாநாட்டின் எதிரொலி !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வரும் மே-17ம் நாள் சனிக்கிழமை மத்திய லண்டனில் இடம்பெறவுள்ள சிறிலங்கா புறக்கணிப்பு மாநாடு தொடர்பில் பிரித்தானியாவுக்கு எதிராக சிறிலங்கா கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளது.சிறிலங்கா அரச தமிழ் “பத்திரிகையில் பிரிவினை வாதத்துக்கும் புலிகளுக்கும் புத்துயிரளிக்க பிரிட்டிஷ் அரசு முயற்சி” என தனது தலைப்பிட்டு தனது கோபத்தினை திட்டித்தீர்துள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இடம்பெறவுள்ள லண்டன் மாநாடானது பி’சிறிலங்காவைப்...

மே 10, 2014

ஆயுதங்கள் மீட்பு 5 ஆண்டுகளின் பின்பு ...

முல்லைத்தீவு, வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். புதைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தோட்டாக்களை கிழக்கு கடற்படை முகாம் அதிகாரிகள் நேற்று மாலை கண்டுபிடித்ததாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். இதில் 98 தர 19 மி.மீ. அளவுடைய ரவைகள் – 120000, எஸ்.ஜி. 12 ...

மே 08, 2014

இராணுவ ஆட்சேர்ப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது :அதிபர்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் இராணுவ ஆட்சேர்ப்பு குறித்து தான் இதுவரை அறிந்து கொள்ளவில்லையென்று தெரிவித்த அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அரசாங்க வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மோசடி செய்து விட்டனர் என்று இதுவரை யாரும் முறையிடவில்லை என்றும் குறிப்பிட்டார்.அவ்வாறு யாரும் முறைப்பாடுகளைச்செய்தால் அது குறித்து விரிவாக ஆராய்ந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் 12 பேர் யாழ்ப்பாணத்தில்நேற்று...

மே 04, 2014

புலிக்கொடிக்கு தடை விதித்துள்ள பாடசாலை?

கனேடிய பாடசாலையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. குறித்த கனேடிய உயர் பள்ளி வளாகத்திற்குள் மாணவர் புலிக் கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 மாணவர் ஒருவர் பாடசாலைக்கு புலிக்கொடியை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தடவைகள் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது அவர் இவ்வாறு புலிக்கொடியை ஏந்திச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது. இம்முறை நடைபெற்ற ஆண்டு...