18

siruppiddy

ஜூன் 25, 2014

விடுதலைப்புலிகளைப் புகழ்ந்த சில சிங்களத் தளபதிகள்

1986ஆம் ஆண்டளவில் யாழ் கோட்டை சிங்கள இராணுவ முகாம் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய இடையூறாக இருந்தது மட்டுமன்றி,அடிக்கடி அங்கிருந்து எறிகணைகளை ஏவி, மக்களைக் கொன்று குவித்து வந்தது சிங்கள இராணுவம். அதனால் ,புலிகள் அந்த முகாமைச் சுற்றி நான்கு புறமும் காவல் போட்டிருந்தனர்.பல சந்தர்ப்பங்களில் கோட்டை முகாமில் இருந்து கனரக வாகனங்களுடன் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் வெளியில் இன அழிப்பு நோக்கத்துடன் வருவார்கள்.அப்போது கோட்டை வாசலில் வைத்தே புலிகள் அவர்கள்...

ஜூன் 24, 2014

கனடா ஜெனிவாவில் முன்வைத்த குற்றச்சாட்டு - இலங்கை நிராகரிப்பு!

வடக்கு பகுதிகளில் உள்ள பெண்களை இலக்கு வைத்து படையினரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக கனடா தெரிவித்த குற்றச்சாட்டை இலங்கை நிராகரித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வசித்து வரும் தமிழ் பெண்களை இலக்கு வைத்து பாலியல் துன்புறுத்தல்களை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து கனடா குற்றச்சாட்டை முன்வைத்தது. பெண்கள் மற்றும் யுவதிகளுக்கு எதிராக இலங்கை படையினர் பாலியல் துன்புறுத்தல்களை...

ஜூன் 21, 2014

இலங்கைக்கு ஐ.நா விசேட பிரதிநிதிகளைஉடன் அனுப்பி வையுங்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஒஸ்கார் பெர்ணன்டஸ் டெரன்கோ, இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்பிரதிநிதி சபினய் நந்தி மற்றும் தூதுக்குழுவினர் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நேற்று மாலை சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். ஏறத்தாழ ஒன்றேகால் மணிநேரமாக நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம்...

ஜூன் 20, 2014

யுத்தம் தமிழினத்துக்கு எதிரானது அல்ல மஹிந்த...

இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் ஒருபோதும் தமிழ் இனத்துக்கு எதிரானது அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரானதுதான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ஜனாதிபதி ராஜபக்சேவை ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் நாகோவ் இன்று சந்தித்து பேசினார் .இந்த சந்திப்பின் போது 2009 ஆம் ஆண்டு யுத்தத்துக்குப் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஜனாதிபதி ராஜபக்சே விவரித்தார். அப்போதுதான், தாங்கள் நிகழ்த்தியது தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தம்...

ஜூன் 17, 2014

பாரிய கண்டனப் பேரணி காத்தான்குடியில் !!

கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா என்பன இணைந்து இன்று  செவ்வாய்க்கிழமை காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணியை அமைதியான முறையில் நடாத்தியது. இக் கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர் பாதுகாப்பு...

ஜூன் 13, 2014

முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன – ஐ.நா

இலங்கையிலிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியன தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி மாய்னா கியாய் Maina Kiai இதனைத் தெரிவித்துள்ளார்.அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.உதாரணமாக உலகின் பல நாடுகளில் பெண்கள் தங்களது உரிமைகளை உறுதி செய்து கொள்ள மேற்கொள்ளும்...

ஜூன் 06, 2014

தமிழக முதலமைச்சர் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே

:  உறுதியான நிலைப்பாடு உற்சாகத்தினை தருகின்றது : நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் சுதன்ராஜ் ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் உறுதியான நிலைப்பாடு , மகிழ்ச்சியினையும் உற்சாகத்தினையும் தருகின்றதாக நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி அவர்களுடனான சந்திப்பின் பொழுது, ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் முன்வைத்திருந்த கோரிக்கை தொடர்பில், தமிழக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த...