18

siruppiddy

டிசம்பர் 21, 2014

இளைஞர் குழு அட்டகாசம்! மக்கள் விசனம்

பொலிஸார் அசமந்தம்! யாழ்.திருநெல்வேலி பகுதியில் உள்ள வீடுகளுக்கு நள்ளிரவு கல்வீசி இளைஞர் குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.இதுகுறித்து தெரியவருவதாவது, திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடுகளுக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு கல் வீசியதுடன் வீட்டு கேற் மற்றும் கதவுகளையும் கால்களால் உதைந்து சுமார் அரை மணிநேரமாக அப் பிரதேசத்தில் நடமாடி அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்தது பொலிசாரின் அவரச அழைப்பிலக்கமான 119 க்கும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கும் தொலைபேசி மூலம் அறிவித்தனர். இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த பொலிசார் வீட்டு உரிமையாளர்களை பொலிஸ் நிலையத்தில் வந்து முறைப்பாடு பதிவு செய்தால் மட்டுமே தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். அதற்கு உரிமையாளர்கள் தாம் நள்ளிரவு நேரம் பொலிஸ் நிலையத்திற்கு வர முடியாது காலையில் வந்து முறைப்பாடு செய்கின்றோம். தற்போது விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், குறித்த இளைஞர் குழு அப் பிரதேசத்தில் நடமாடும் வாய்ப்புள்ளதால் தேடி பார்க்கும் மாறும் வீட்டு உரிமையாளர்கள் பொலிசாரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்க மறுத்த பொலிசார் முறைப்பாடு பதிவு செய்தால் மாத்திரமே விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.முறைப்பாடு இல்லாமல் தம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து அங்கிருந்து சென்றனர். பொலிசாரின் இந்த நடவடிக்கை வீட்டு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக