18

siruppiddy

டிசம்பர் 07, 2014

தமிழர் தொடர்பான நிலைப்பாடும் ராதிகா சிற்சபைஈசனும்!

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனை பொறுத்தவரை 2014ம் ஆண்டு அவரைப் பிரபல்யமாக்கும் ஆண்டாக இருந்து வருகிறது.
ஜனவரியில் இலங்கை விஜயத்தின் போதும், இப்போது பாராளுமன்றப் பேச்சுக் குறித்தும் அவர் பிரபல்யப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கனடியப் போர்வீரர்களின் நினைவு தினத்தோடு மாவீரர் தினத்தை ராதிகா ஒப்பிடுவது மிகவும் தவறு என கண்டித்து பாதுகாப்பு அமைச்சர் மேற்கொண்ட வார்த்தைப்பிரயோகங்கள் மிகவும் கடுமையானவையாக இருந்தது.
மாவீரர்கள் தினமெனக் குறிப்பிடுவது தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் ஒரு தினமே தவிர அது போரில் இறந்த சகலரையுமோ அல்லது இதர தரப்புக்களையோ நினைவுகூரும் தினமல்ல என்பதை ஊடகங்களே வெளிக்கொணர்ந்து இந்த விவகாரத்திற்குத் தூபமிட்டன.
கனடிய அரசாங்கமோ ஆளும்கட்சியோ என்றுமே தங்களது நிலைப்பாட்டிலிருந்து மாற்றமடையவில்லை. அவர்கள் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறை கொண்டிருக்கிறார்கள். அதேவேளை, விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு அது தடைசெய்யப்பட்ட அமைப்பு என்பதில் திடமாக இருக்கிறார்கள்.
தற்பெருமை தேடுவதற்காக தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் பேச்சாளராக இருந்த தமிழர் தங்களது ஏற்பாட்டில் சில தமிழர்கள் தற்போதைய கனடிய ஆட்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று சொன்ன தகவலே கனடிய அரசைக் கோபமுற வைத்திருக்கிறது என்பது உள்ளிட்ட பல தகவல்களை பகிர்ந்திருந்தார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக