18

siruppiddy

செப்டம்பர் 30, 2015

வித்தியா கொலை சந்தேகநபர்கள் தங்களைப் பற்றி தவறாக எழுதும் இணையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் –

இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் முறையிட்டு உள்ளனர். புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்றது. குறித்த வழக்கு விசாரணையின் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா...

செப்டம்பர் 24, 2015

இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளுடன் சுமந்திரன்! அவசர பேச்சு?

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினருக்குமிடையில்  இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது ஐ.நா.வின்  அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள், புதிதாக இணைக்கப்படவுள்ள சொற்றொடர்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக...

செப்டம்பர் 20, 2015

இராணுவம் பெண் போராளியை சிதைத்து கிடந்த துயரத்தை பார்த்தேன்! ஐ.நாவில் சாட்சி

வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம்பெற்றன. அவற்றில் தான் பார்த்தவற்றை கலக்கத்துடன் ஐ.நா மன்றில் விளக்குகிறார் இறுதி யுத்தத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய தமிழ் வாணி.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்வேறு  மனித உரிமைகள்  மீறல்கள் இடம்பெற்றன.இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றன.குறிப்பாக பெண்களுக்கு இடம் பெற்ற அநீதிகளை முடிந்தவரை மனித உரிமைகள் கவுன்சிலுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்...

செப்டம்பர் 19, 2015

போர்க்குற்றங்கள் சர்வதேச நீதிபதிகள் மூலமே விசாரிக்கப்பட வேண்டும்!

எத்தகைய விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுளள்ள  அவர்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்கிறேன். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளன. உண்மையை மட்டுமே நான் கூறி வருகிறேன். இலங்கை அரசாங்கம்...

செப்டம்பர் 11, 2015

புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை வெளியிட்டார் “சனல்4″ கல்லம் மக்ரே.

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை, சனல்4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவரான போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மக்ரே, மற்றொரு ஆவணப்படத்தை இன்று வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்கா: நீதிக்கான தேடல்’ (Sri Lanka: The Search For Justice) என்ற தலைப்பில் இந்த அரை மணிநேர ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் தயாரிக்கப்பட்டு இன்று அனைத்துலக சமூகத்துக்கு காண்பிக்கப்படும்...

திடீர் நாடக மன்றத்தின் மாமா மாப்பிளே காணெளி இணைப்பு

நோர்வே கலைஞர்ககள் நோர்வே super ஸ்டார் இணைந்து வழங்கிய நகைச்சுவை நிகழ்வு இதில் ஸ்ரீகாந்த் நல்லையா ,அருள் சதீசன் ,ஆறுமுகம் பிரபா ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளார்கள் எமது கலைஞர்கள் கலையுலகில் தங்கள் திறமைகளை  சொந்தப்படைப்புகளிலும், திரைபடங்களில் வெளிவந்த ஆங்கங்களிலும்  தங்களை இணைத்து கலைவளத்துவருகின்றனர் அந்தவகையில் இந்த திடீர் நாடக மன்றத்தின் மாமா மாப்பிளே உங்கள் பார்வைக்கு தருவதில் மகிழ்வு இவர்கள் பணி சொந்தப்படைப்பாக திகழ வாழ்த்துக்கள் ...

செப்டம்பர் 09, 2015

போர்க் குற்றவாளியாக ராஜ பக்ஸசவை நிறுத்த கோரி தீக்குளிப்பு!

ராஜ பக்ஸசவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி தீக்குளிப்பு! மனித உயிர் பலியை தடுத்து நிறுத்தி, மூளையை செயல்படுத்தி வெற்றி பெற வேண்டிய நேரம் இது. அவர் குடும்பத்தை நினைத்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை.முடிந்தால் நீங்களும் போராட்டத்தில்  கலந்து கொள்ளுங்கள். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

செப்டம்பர் 05, 2015

அமர்வுகளுக்கு வராத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை???

நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் சபையில் பிரசன்னமாகாத  உறுப்பினர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படும். அவ்வாறு பிரசன்னமாகாத உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமர் கோரியுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் அமைச்சர்கள் பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து சபாநாயகருக்கும்,...

செப்டம்பர் 04, 2015

கன்னி நாடாளுமன்ற உரையை சிங்களத்தில் ஆற்றிய தமிழ் எம்.பி!

ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலு குமார் தனது கன்னி நாடாளுமன்ற உரையை தனிச்  சிங்களத்தில் நேற்று  நிகழ்த்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உரையாற்றுவதற்கு வேலு குமார் எம்.பிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போதே தனது கன்னி உரையை அவர் சிங்கள மொழியில் நிகழ்த்தியுள்ளார்....

செப்டம்பர் 03, 2015

கேபி தலைவர் பிரபாகரன் பற்றி தனக்க்கு தெரியாது என்று கூறியவர் ???

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றிய செய்திகளுக்கு குறைவில்லை காட்டிக் கொடுத்தவர்களும் இனத்தை அழித்தவர்களும் தற்போது தலைவரின் நாமத்தை தூக்கி பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள். தமிழின தூரோகிகளில் முன்னிலை வகிக்கும் கருணாவை அடுத்து கேபி எனப்படுபவர் தற்போது அந்தர்பல்டி அடித்துள்ளார். தலைவரின் இருப்பை உறுதிப்படுத்திய அவர் பின் அப்படியே கதையை மாற்றிப்போட்டு தான்தான் தலைவர் என அறிவித்து சில நாட்களிலேயே ஶ்ரீலங்கா அரசுடன் இணைந்தார் தற்போது...

செப்டம்பர் 02, 2015

சிங்களவர்களுக்கு வடக்கில் வழங்கப்பட்ட விவசாய ஆராய்ச்சி நியமனங்கள் ரத்து!

வட மாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உதவியாளர்கள் வெற்றிடத்திற்கு சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் மீளப் பெறப்பட்டுள்ளதாக வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். மாகாண சபையின் 34வது அமர்வு நேற்று இடம்பெற்ற போதே இது தொடர்பாக அவர் அறிவித்தார். கடந்த மாதம் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்குமான விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் நியமனத்திற்கு சிங்கள உத்தியோகத்தர்களே அதிகளவில் நியமிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக  361 நியமனத்தில்...