நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் தினங்களில் சபையில் பிரசன்னமாகாத
உறுப்பினர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படும். அவ்வாறு பிரசன்னமாகாத உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் பிரதமர் கோரியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் அமைச்சர்கள் பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து சபாநாயகருக்கும், ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரிடமும் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். எதிர்க்கட்சியின்
உறுப்பினர்களும்
பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து சபாநாயகருக்கு அறிவித்தல் மிகவும் பொருத்தமானது. நாட்டை முன்னோக்கி நகர்த்த, நாடாளுமன்றை வலுவானதாக
மாற்ற வேண்டும். அதற்கு உறுப்பினர்கள் அமர்வுகளில் பிரசன்னமாவது மிகவும் அவசியமானது என பிரதமர், சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக