இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் முறையிட்டு உள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் நடைபெற்றது.
குறித்த வழக்கு விசாரணையின் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என வினாவிய போது
சந்தேக நபர்களில் ஒருவர் இணையத்தளங்கள் எங்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடுகின்றது. அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதவானிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதவான் வழக்கின் போக்கினை திசை திருப்பும் விதமான செய்திகள் வெளியிடப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் அவதூறு செய்திகள் தொடர்பில் பொலிசாரிடம் முறையிடுங்கள் என பதிலளித்தார்.
இதே வேளை வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் தப்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ள வேளையில் எவ்வாறு இணையத்தளச் செய்திகளைப் பார்வையிடுகின்றார்கள்? அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? அவர்கள் சிறைக்குள் கைத்தொலைபேசிகள் பாவிக்கின்றார்களா? என கடும் சந்தேகம் எழுந்துள்ளதாக
சட்டத்துறையைச் சேர்ந்த சிலர் சந்தேம் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இணையத்தளங்களில் வரும் செய்திகள் தொடர்பாக இவர்கள் தகவல்களைப் பெற்றுள்ளது பெரும் சந்தேகமாக இருப்பதாக அவர்கள்
தெரிவிக்கின்றனர்.
இந் நிலையில் இன்று நடைபெற்ற வித்தியாவின் வழக்கு விசாரணையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் மூக்குகண்ணாடியையும் ஆய்வுக்கு அனுப்பி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.
குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் இவ் உத்தரவு பிறப்பித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக