மனித உரிமைகள் ஆணையகத்தின் நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை அமுலாக்கும் பணிகளில், இலங்கையுடன் மனித உரிமைகள் ஆணையகம் விரிவாக ஒத்துழைத்து செயற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நேற்று நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் பிரேரணை, இலங்கைக்கான வரலாற்று ரீதியான வாய்ப்பாக அமையும்.
இந்த பிரேரணையின் ஊடாக நிலையான அமைதியை ஏற்படுத்தவும், நீதியை பெற்றுக் கொள்ளவும் இலங்கை தமது சொந்த பாதையில் பயணிப்பதற்கான சர்வதேசத்தின் ஒத்துழைப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுலாக்க வேண்டும்.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என் அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக