18

siruppiddy

டிசம்பர் 02, 2015

பாரிய மோசடியில் போக்குவரத்துசபை சிக்கியது???


கடந்த காலத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2200 பேருந்துகள் தருவிக்கப்பட்ட போது 3080 மில்லியன் ரூபா மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சந்திரஜித் மாரசிங்க இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த காலத்தில் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் இருந்து 2200 பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் CIF விலை (COST INSURANCE AND FREIGHT) விலை 30,000 அமெரிக்க டொலர்கள் எனக் 
குறிப்பிடப்பட்டுள்ளது
. இருந்தபோதிலும், இலங்கைக்கு 40,000 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையிலேயே 2200 பேருந்துகள் இறக்குமதி 
செய்யப்பட்டுள்ளன.
இதற்கமையே 3080 மில்லியன் ரூபா எங்கு சென்றது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரஜித் மாரசிங்க 
கேள்வியெழுப்பியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக