18

siruppiddy

டிசம்பர் 08, 2015

அரசியல் கைதி ஒருவர் யாழ் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டம்!!!

யாழ்ப்பாணம் .சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவராசா ஜெனீபன் (வயது 36) என்ற நபரே உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண மேல்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் நேற்றைய தினம் இவரது வழக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கின் சாட்சிக்காரராக புலனாய்வுத்துறை அதிகாரி மன்றில் ஆஜராகாத நிலையில் வழக்கு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதுவரை காலமும் புலனாய்வுத் துறை அதிகாரி, மன்றில் ஆஜராகாத நிலையில் தனது வழக்கு தொடர்ந்து கொண்டு போவதாக கூறியே குறித்த கைதி போராட்டத்தில் குதித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக