18

siruppiddy

டிசம்பர் 11, 2015

முக்கிய 2 விடுதலை புலிகள் விடுதலையாகவுள்ளர் இதனால் கோட்டபாய கதறல் !

நல்லிணக்க அடிப்படையில் , மைத்திரி அரசானது 2 முக்கிய விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை விடுதலை செய்ய உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள். இதேவேளை
 இன்றைய தினம்
 இது குறித்து கோட்டபாய ராஜபக்ஷவும் கவலை வெளியிட்டுள்ளார். விடுதலையாக உள்ள முக்கிய புலிகள் உறுப்பினர்களின் மொறிஸ் என்னும் நபரும் அடங்குகிறார். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஆனால் இதுவரை எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பது 
ஆச்சரியமான உண்மை.
விடுதலைப்புலிகளின் கொழும்பு திட்டமிடலின் சூத்திரதாரி மொறிஸ் என்று கூறப்படுகிறது.முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே, மற்றைய நபர் "ஜின் "என்ற பெயரினால் இனம் காணப்படுபவர். சரத்பொன்சேகாவா மீது தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட பெண்ணை மோட்டார்சைக்கிளில் அழைத்து வந்தவர் மொறிசே. விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என அழுத்தம் கொடுப்பவர்களிற்கு அவர்கள் என்ன சூழ்நிலையில் கைதுசெய்யப்பட்டார்கள் என
 தெரியாது, என்று 
கோட்டபாய மேலும் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் உட்பட பலர் விடுதலைசெய்யப்பட்டனர் இவ்வாறு விடுவிக்கப்படாமலிருந்தவர்கள் தேசியபாதுகாப்பிற்கு கடும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவர்கள் என்றும் கோட்டபாய மேலும்
 புலம்பியுள்ளார்.
தாங்கள் தடுத்து வைத்திருந்த சில புலிகள் உறுப்பினர்கள், போட்டு அம்மானோடு நேரடித்தொடர்பில் இருந்ததாகவும். அவர்கள் சிறையில் இருந்தவேளை தமது இலக்கு மாறமல் இருந்ததாகவும் கோட்டபாய தெரிவித்துள்ளார். அவர்களின் மண்டையை எம்மால் கழுவமுடியவில்லை. புணர்வாழ்வும் கொடுக்க முடியவில்லை. இதனால் தான் நாம் 
அவர்களை தொடர்ந்தும்
 தடுத்து வைத்திருந்தோம். ஆனால் மைத்திரி அரசு அவர்களை விடுதலை செய்கிறது. இனி என்ன நடக்குமோ தெரியாது என்று கோட்டபாய மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக