18

siruppiddy

டிசம்பர் 19, 2015

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை?

போர்க்குற்ற விசாரணையின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய நாடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திவயின பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திவயின பத்திரிகை செய்தியொன்றை பிரசுரித்துள்ளது. அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஐந்து மேற்கத்தேய நாடுகள் நவீன ஆயுதங்களை வழங்கியிருந்தன.
இந்த நாடுகளே ஜெனீவா பிரேரணையின்போது இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பட்டு, போர்க்குற்ற விசாரணையை 
திணித்துள்ளன.
குறித்த நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகள் எம்-16 தாக்குதல் ஆயுதங்கள், குரூனர் தகவல் தொடர்பு சாதனங்கள், வோட்டர் ஸ்கூட்டர், விமான ஓடுபாதை கருவிகள், சேரா ரக செய்மதித் தொடர்பாடல் கருவிகள், ரேடார் கருவிகள் மற்றும் ஏனைய ஏராளமான நவீன ஆயுதங்களையும் பெற்று பயன்படுத்தியிருந்தனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவில் இருந்து குறித்த ஆயுதங்களுடன் ஹெரிசைட் வெடிமருந்துகள் ஆயிரம் கிலோவும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
இவற்றில் ஹெரிசைட் வெடிமருந்து மேற்குலகின் சக்தி வாய்ந்த நாடு ஒன்றினால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றது.
அந்தவகையில் போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய குறித்த ஐந்து நாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அது தொடர்பான ஆவணங்கள் தற்போது திரட்டப்பட்டு வருகின்றது என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக