18

siruppiddy

ஜூலை 09, 2020

யாழ் நவாலி ஆலய படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் – நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அரச விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 147 பேரின் 25ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (09) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
இராணுவம் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தும் விதமான கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலயத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலும் ஆலயத்துக்கு உள்ளும் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவு மக்கள் கலந்து கொண்டு 
அஞ்சலி செலுத்தினர்
>>>>>>>>>>>>>>>
யாழ் நவாலி ஆலய படுகொலையின் 25ம் ஆண்டு நினைவுநாள் இன்று
>>>>>
யாழ் நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயம் மீதான விமானத் தாக்குதலில் 147 பேர் படுகொலை செய்யப்பட்ட 25ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
199ஆம் ஆண்டு இதே மாதம் 9ம் திகதியன்று நவாலி பீட்டர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசி 147 பேரை 
படுகொலை செய்தது.
இந்த படுகொலை நினைவேந்தலை இன்று அனுஷ்டிக்கவிருப்பது தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் புலிகளை மீள உருவாக்க முயற்சிக்கிறார் என்று கூறி பொலிஸார் முன்வைத்த தடை கோரிய மனுவை மல்லாகம் நீதிமன்றம் நேற்று (08) நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>



கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் பாதிப்புக்குள்ளான கிரான் மற்றும் வெருகல் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரத்திற்கான உலருணவு பொதிகளும், மரக்கறி கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தொழில் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், வைத்தியசாலைகளில் சிறுவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சிறுவர் பிரிவுகளுக்கும் உதவும் வகையில் மலேசியா தமிழர் பேரவையின் நிதி உதவியுடன், செரன்டிப் சிறுவர் இல்லம் மற்றும் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் உதவிகளை வழங்கி வருகின்றனர் .


அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்த தொழில் செய்பவர்களில் தொழில் பாதிப்புக்குள்ளானவர்களில் தெரிவு

 செய்யப்பட்டவர்களுக்கும், திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று, வெருகல் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் தொழில் பாதிப்புக்குள்ளான விசேட தேவையுடையவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் உதவியின் கீழ் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கு மரக்கறி கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரண உதவிகளை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ் பாபு, உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக உளவள துறை பிரிவு

உத்தியோகத்தர் விக்னேஸ்வரி பிரதீபன், விவசாய பிரிவு உத்தியோகத்தர்கள், கல்வி மேம்பாட்டுக்கான கனடா அமைப்பின் மாவட்ட பொருளாளர் எம்.ஷிராணி, சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜெகதேவன் ஜெரோன் ஆகியோர்
கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>

ஜூன் 28, 2020

கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டம் அதிரடிப் படையால் அழிப்பு

மொனராகலை – கதிர்காமத்தில் பாரிய கஞ்சா தோட்டமொன்று
 இன்று (28-06-29) அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்த கஞ்சா செடிகள் அதிரடிப் படையால் அழிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஜூன் 01, 2020

யாழ் நூல் நிலையம் 31.05.1981 அன்று நள்ளிரவு எரிப்பு

தென்கிழக்கு ஆசியாவில் முதன்மையான
 பொதுநூலகமாக விளங்கியதும் உலகில் வேறெந்த நூலகத்திலும் காணக்கிடைக்காத அன்றைய தமிழ்ப் புலமையாளர்கள் சேர்த்து
 உருவாக்கிய தமிழ் மரபையும் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு தொல்பொருள் வைப்பகமாகத் திகழ்ந்தது யாழ்ப்பாணம் நூலகம்.

 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளைஅழி என்பார்கள்.வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களின்
 புலமைச் சொத்தாகக் கருதப்பட்டு வந்த யாழ் நூலகம் எரிந்து சாம்பலாக்கப்பட்ட சம்பவம்
 வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாகக் கருதப்படுகிறது.

1933 இல் அறிவால் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை யாழ் நூலகம் உருவாகக் காரணமாக இருந்தவர் அச்சுவேலியைச் சேர்ந்த யாழ்ப்பாண நீதிமன்றக் காரியதரிசியாக இருந்த k.m செல்லப்பா அவர்கள்.

வணக்கத்திற்குரிய வணபிதா லோக் அவர்களும் மிகுந்த அக்கறை காட்டினார்.
கலாநிதி எஸ்.ஆர் ரங்கநாதன், சென்னை
 அரசின் கட்டடக் கலை நிபுணர் கே.எஸ் நரசிம்மன் கட்டக்கலைக்கான வரைபடங்களை வழங்கியிருந்தார்.
1959 இல் யாழ்முதல்வராக இருந்த
 துரையப்பா அவர்களால் யாழ் நூலகம்
 திறந்து வைக்கப்பட்டது.

31.05.1981 அன்று நள்ளிரவு யாழ் நூல் நிலையம் எரிந்து கொண்டிருந்ததை யாழ் புனித சம்பத்தரியார் கல்லூரி மேல்மாடிக்
 கட்டடத்தில் வசித்த வேளை இதனைப்
 பார்த்த பாதிரியார் தாவீது அடிகளார்
 இதனைக் கண்ணுற்ற அதிர்ச்சியில்
 மாரடைப்பால் உயிரிழந்தார்.

9700 நூல்களும்,
ஓலைச்சுவடிகளும் தடுமாறி நிறம் மாறி உருச்சிதைந்தன.
1660 இல் Robert கினொக்ஸ் எழுதிய
History of ceylon,
யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் நாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம்,
தமிழில் முதன்முதலில் வந்த இலக்கியக்
 கலைக் களஞ்சியமான அபிதானகோசம்.
 ,சித்த வைத்தியம் பற்றிய ஓலைச்சுவடிகள்
 அனைத்தும் அன்று கருகிச் சாம்பலாகின.

1994 இல் மீளக்கட்டியெழுப்பும் திட்டம் மங்கள சமரவின் வெள்ளைத்தாமரை
 அமைப்பால் Book & Brick
என்ற தலைப்போடு அதே இடத்தில் கட்டப்பட்டது.

தமிழர்களின் அறிவுக் கருவூலமாக இருந்த யாழ் நூலகம் எரிந்து சாம்பலாகிய நாள்.மறக்க முடியாத வடு. எத்தனையோ பேரின்
 சிந்தனைக்கு அறிவூட்டிய அறிவுச்சிகரம்
 சிதைந்து போனதே யாழ்ப்பாண நூலகத்தின் கதையாகிறது
நிலாவரை.கொம் செய்திகள் >>>



 

மே 30, 2020

குழந்தையை எட்டு மாதக் கருவில் சுமக்கும் கணவன்..வயிற்றை முத்தமிடும் மனைவி

குழந்தையை கருவில் கணவன் சுமக்க மனைவி கணவனின் வயிற்றை முத்தமிடும் .இந்த வித்தியாசமான ஜோடிகள்.. கணவர் Esteban Landrau பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். மனைவி Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்.
இருந்தாலும், இவர்கள் இன்றளவும் அறுவை சிகிச்சை செய்து தங்கள் இனப்பெருக்க
 உறுப்புகளை அகற்றிக்கொள்ளவில்லையாம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜோடி, இயற்கையாகவே கருவுற்றிருக்கிறார்கள்.எட்டு மாத கர்ப்பமாக 
இருக்கும் Esteban-க்கு ஒரு நாள் திடீரென இடுப்பு வலி வர, உடனே தனக்கு குழந்தை பிறக்கப்போவதாக எண்ணி, உறவினர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு மருத்துவமனைக்கு
 ஓடியிருக்கிறார்.
ஆனால், எட்டு மாத கர்ப்பகாலத்தில் இதெல்லாம் சகஜம், இது போலி இடுப்பு வலி என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம் மருத்துவர்கள்.தங்களுக்கு குழந்தை பிறந்தால் Ariel என்று பெயர் வைக்கப்போவதாக சொல்லி உணர்ச்சி வசப்படுகிறார்கள் இந்த வித்தியாசமான தம்பதியர்கள். .

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மார்ச் 20, 2020

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய வர்களை யாழில் தேடுதல் ஆரம்பிக்கப்படலாமாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் எந்த நேரத்திலும் இலங்கை படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம் 
பேசப்பட்டுள்ளதாக  தெரிவிப்பு 
அத்துடன், புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப் படையினர் தேடுதல் நடவடிக்கையில்
 ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய சிலர் அந்த பகுதியில் இலங்கை படையினர் நடத்திய தேடுதலில் இருந்து தப்பித்து யாழ்ப்பாணத்தை ஒட்டிய பிரதேசத்தில் தங்கியிருப்பதாக அதிகாரிகள் தரப்பிற்கு சந்தேகம் உள்ளதாக தெரியவருகிறது.
அதையொட்டி யாழ்ப்பாணத்தில் சில சமயத்தில் எந்நேரத்திலும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடக்கலாம் எனத் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுப்படுத்தும் நோக்கில்   இன்று .20,03,2020,வெள்ளிக்கிழமை ஆறு மணியில்  இருந்து ,23,03.2020,திங்கள்கிழமை ,காலை ஆறுமணி வரை 
இலங்கை முழுவதும்  ஊரடங்குச் சட்டம் .
இதேவேளை, இன்று காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>