
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் விவாதிக்கப்படவுள்ளது.இந்நிலையில் தீர்மானத்தைத் தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசு கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கை அரச பிரதிநிதிகள் உலக நாடுகளுக்குச் சென்று தமக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் விநயமாக வேண்டி நிற்கின்றனர். அதேநேரம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகள் இலங்கையில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை...