18

siruppiddy

ஜனவரி 09, 2014

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக

இலங்கை – இந்திய உடன்படிக்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்கள் உட்பட சிறுபான்மை மக்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வாதற்காக உறுதிப்பாடுகளை இந்தியா மேற்கொண்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை மதிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

இலங்கை அரசாங்கம், இந்தியாவிடம் உதவியை நாடியது. இந்தியாவில் உள்ளது போல் மத்திய அரசாங்கத்திடம் இருந்து மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் என இலங்கை உறுதியளித்தது.

எவ்வாறாயினும் இலங்கை ஒரு இறையாண்மைமிக்க நாடு. அந்த நாடு தன்னை பற்றிய முடிவுகளை எடுக்கும்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக இலங்கை தமிழர்கள் உட்பட ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் கண்ணியமாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கான உறுதிப்பாடுகளை இந்தியா வழங்கும் என சல்மான் குர்ஷித் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக