18

siruppiddy

ஜனவரி 12, 2014

டக்ளஸ் - சங்கரி வடக்கில் இணைந்து புதிய கூட்டணி! –

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க இணைகின்றனர்.
வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக பலமான கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக தமிழ்க்கட்சிகள் சில யாழ்ப்பாணத்தில் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளன. இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான

கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, சிறீடெலோ சார்பில் அதன் செயலாளர் உதயராசா மற்றும் யாழ்.மாவட்ட அமைப்பாளர் செந்தூரன், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் சுகு சிறிதரன், ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய தமிழழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
   
இந்த கலந்துரையாடல் நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது.இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில்

மேற்கூறப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகச் செயற்படுவது என்பதாக இருந்தவுடன், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக