கிளிநொச்சி பூநகரிப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் இராணுவத்தினர் இன்றைய தினம்(16.03.2014) தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்கள் இதனால் மக்கள் பதட்டத்துடனும் அச்சத்துடனும் காணப்படுகின்றார்கள்.
பூநகரிப் பிரதேசக் கிராமங்களான வலைப்பாடு,
செம்பன்குன்று, பொன்னாவெளி, கிராஞ்சி போன்ற கிராமங்கள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு உடல் சோதனைகள் அடையாள அட்டைப் பரிசோதனைகள், சோதனைகள் என்பவற்றை வீதிகளால் போவோர் வருவோரிடமும் வீடுகளில் இருப்போரிடத்திலும் நடத்திவருகின்றார்கள். இதனால் இங்குள்ள மக்கள், வீதிகளால் போக்குவரத்துச் செய்யும் மக்கள் எனப்பலரும் அச்சத்துடனேயே காணப்படுகின்றார்கள். தருமபுரம்
முசலாம்பிட்டியில் அவர்களது வீட்டில் வைத்து வயோதிபத் தாயாரான பா.ஜெயக்குமாரி வயது-51 மகளான 13 வயதுச் சிறுமி பா.விபூசிகா ஆகியோர் கைதுசெய்யப்ட்தன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களில் இராணுவச் சுற்றிவளைப்புக்கள் சோதனைகள் மக்களை அச்சமூட்டும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக