பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், அந்நாட்டு பாராளுமன்றிற்கு எழுத்து மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தக் கூடிய வலுவான தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தேச தீர்மானத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முழு அளவிலான விசாரணைகளை நடாத்தி நியாயம் வழங்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல், சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தல் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்தானியா ஏற்கனவே வரவேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முன்னேற்றங்களை உதாசீனம் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்து குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானமானது சகல இன மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக