வெள்ளைவேனுக்கு பதிலாக கறுப்பு வேன் கலாசாரம் ஆரம்பம்
வெள்ளைவேன் கடத்தல் கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு கறுப்பு வேன் கடத்தல் கலாசாரம் உருவாகியுள்ளது. கூட்டு கட்சிகளின் ஜனநாயக ஆட்சியில் இதுவும் ஒரு அடையாளமா என மக்கள் விடுதலை முன்னணியினர் கேள்வி எழுப்பினர்.
ஜனநாயகம் என்ற பெயரில் அடக்குமுறை அரசாங்கமே இன்றும் முன்னெடுக்கப்படுவதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியது.
மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றபோதே கட்சியின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கடந்த காலத்தில் ஆட்கடத்தல், காணாமல்போகும் கலாசாரம் அதிகமாகவே காணப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து ஜனநாயகம் பேசியதையும் நாம் அவதானித்தோம். அதேபோல் கடத்தல் சம்பவங்கள், காணாமல்போதலை தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் ஆட்சிமாற்றம் ஒன்றை மக்கள்
மூலம் ஏற்படுத்தவும்
அனைவரும் முன்வந்தோம். அவ்வாறான நிலையில் ஆட்சிமாற்றம் ஒன்றும் நிகழழ்ந்தது. இந்த மாற்றத்தில் ஜனநாயகம் பலப்படுத்தப்படுவதுடன் வெள்ளைவேன் கலாசாரம் உள்ளிட்ட அடக்குமுறை செயற்பாடுகள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்பனவும்
வலியுறுத்தப்பட்டது.
ஆனால் இன்று வெள்ளைவேன் கலாசாரம் அழிக்கப்பட்டாலும் கறுப்பு வாகனத்தில் கடத்தும் கலாசாரம் தலைதூக்கியுள்ளது. அமைச்சர்களின் தேவைக்கும் அவர்களின் பழிதீர்க்கும் நடவடிக்கைகளுக்கும் அமைய ஆட்களை கடத்தும் கலாசாரம் மீண்டும் இந்த ஆட்சியில் பலமடைந்து
காணப்படுகின்றது.
கடந்த ஆட்சியில் நடந்த மோசமான சம்பவங்களையும் ஆட்கடத்தல் கலாசாரத்தையும் மாற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதே தவிர வெள்ளைவேனுக்கு பதிலாக கறுப்பு டிபென்டர் வாகனங்களை மாற்றவேண்டும் என கூறவில்லை.
அதேபோல் ஆட்கடத்தல் அரசியல்வாதிகள் என கூறப்படும் நபர்களின் பின்னணி என்ன? அவர்கள் எவ்வாறான சூழலில் வளர்ந்தவர்கள் என்பது புதிதாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலத்தில் இவர்களின் அரசியல் நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்தது என்பதும் மக்களுக்கு
நன்றாகவே தெரியும்
. ஆகவே, அரசியல்வாதிகளை பற்றி கதைத்து மக்களை ஏமாற்றாது இந்த கலாசாரத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் பொருளாதார ரீதியில் இந்த அரசாங்கம் மிகவும்
மோசமான
கொள்கைகளையே முன்வைத்துள்ளது. எந்த அரசாங்கமும் மேற்கொள்ளாத வகையில் இந்த கூட்டு அரசாங்கம் தமது பொருளாதாரக் கொள்கைகளை வரவு – செலவு திட்டத்தில் முன்வைத்துள்ளது. முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களையும் கொள்ளையையும் கண்டறிவதாக தெரிவித்து
உருவாக்கிய
இந்த அரசாங்கம் இந்த ஆட்சியிலும் ஊழல் நடவடிக்கையையே முன்னெடுக்கின்றது. ஊழலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க மக்களின் மீது பொருளாதார சுமைகளை சுமத்தி பணத்தை அறவிட
முயற்சிக்கின்றது.
இவைகளும் நல்லாட்சியில் ஒரு அடையாளமா என்ற கேள்வியே இப்போது அனைவர் மத்தியிலும் எழுகின்றது. நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்ட அரசாங்கமும் இன்று அராஜக அரசாங் கமாகவே மாறியுள்ளது என அவர் குறிப் பிட்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>