18

siruppiddy

மார்ச் 28, 2014

தற்போதைய நாட்டின் நிலைமைக்கு அரசாங்கமே காரணம்

   ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அரசியல் காரணத்திற்காக அரசாங்கம் ஒட்டு மொத்த நாட்டின் நன்மதிப்பையும் சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை சவால்களை கண்டு அஞ்சப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறிப்பிட்டிருந்தார் எனவும், மாகாணசபை தேர்தலையே இலக்கு வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய...

மார்ச் 23, 2014

புலி இல்லை என்று கூறும் நீங்கள் ஏன் சோதனை செய்கிறீர்கள்

யாழ். மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் காக்கைதீவுச் சந்திப்பகுதியில் இன்று பகல் இராணுவமும் பொலிஸாரும் இணைந்து வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனால் மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்திருந்தனர். எனினும் அந்தப் பகுதியால் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கும்...

மார்ச் 20, 2014

நாட்டையும் வயிற்றையும் ஜனாதிபதி சிறிதாக்கியுள்ளார்: ரணில்

நாட்டைப் போன்றே, மக்களின் வயிற்றையும் ஜனாதிபதி சிறிதாக்கியுள்ளார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனவடனகம பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் திட்டமானது கடந்த 1990 – 1991ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலேயே முன்னெடுக்கப்பட்டது என்றும் அவர் கு...

மார்ச் 19, 2014

மாணவர்கள் போராட்டம்; பொலிஸார் கண்ணீர்ப்புகை

 இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.இதனால் கொழும்பு – கோட்டை பகுதியில் பதற்றம் நிலவுவதுடன் பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.இலவச கல்வியை அழித்தல், மாணவர்களை ஒடுக்குதல் உள்ளிட்ட அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக...

மார்ச் 16, 2014

இராணுவம் சோதனை மக்கள் அச்சத்தில்

கிளிநொச்சி பூநகரிப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் இராணுவத்தினர் இன்றைய தினம்(16.03.2014) தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்கள் இதனால் மக்கள் பதட்டத்துடனும் அச்சத்துடனும் காணப்படுகின்றார்கள். பூநகரிப் பிரதேசக் கிராமங்களான வலைப்பாடு, செம்பன்குன்று, பொன்னாவெளி, கிராஞ்சி போன்ற கிராமங்கள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு உடல் சோதனைகள் அடையாள அட்டைப் பரிசோதனைகள், சோதனைகள் என்பவற்றை வீதிகளால் போவோர் வருவோரிடமும் வீடுகளில் இருப்போரிடத்திலும்...

மார்ச் 13, 2014

சர்வதேச விசாரணைக்கு பூரண ஆதரவளிக்கப்படும்

  இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ;கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைமையிலான சர்வதேச விசாரணைகளுக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.பிரித்தானியாவின் வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், அந்நாட்டு பாராளுமன்றிற்கு எழுத்து மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தக் கூடிய வலுவான தீர்மானமொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.உத்தேச...

மார்ச் 06, 2014

ஜெயதிலக சீற்றம் சிறந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டார் பீரிஸ்!

 ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று நிகழ்த்திய உரை மனிதஉரிமைகள் பேரவையில், இலங்கைக்கு வாக்குகளை தேடித் தருவதற்குப் பதிலாக, ஆதரவாக வாக்களிக்கவிருந்தவர்களையும், எதிராக வாக்களிக்க தூண்டும் வகையில் இருந்ததாக இலங்கையின் மூத்த இராஜதந்திரி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில்,எழுதியுள்ள தயான் ஜெயதிலக, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் உரை, மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு வாக்குகளை தேடித் தருவதற்க...

மார்ச் 04, 2014

மட்டக்களப்பில் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள கெவிலியாமடுவில் தற்போதுள்ள சிங்கள குடும்பங்களுக்கு வதிவிடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பன உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மட்டக்களப்பு நகரில் பௌத்த பிக்குமார்கள் மற்றும் பெண்கள் உட்பட சிங்கள மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பட்டமொன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரையின் பிரதம குரு அம்பிட்டியே சுமனரத்ன தேரோ தலைமையில் நடைபெற்ற இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் சிங்கள ராவய அமைப்பை...

மார்ச் 03, 2014

சில திருத்தங்கள்நவனீதம்பிள்ளையின் அறிக்கையில்

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இன்றைய தினம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். இது தொடர்பான உத்தேச அறிக்கை ஒன்றை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பதிலளித்துள்ளது.இந்த...