18

siruppiddy

ஜனவரி 29, 2015

பதவியிழந்த ஷிரானி மீண்டும் தலைமை நீதிபதியானார்..

 ராஜபக்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட, இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியான, ஷிரானி பண்டாரநாயகேவை, மீண்டும் அதே பதவியில் அமர்த்தியுள்ளார், இலங்கையின் புதிய அதிபர், மைத்திரிபால சிறிசேன. கடந்த 2013ம் ஆண்டில், ஷிரானி பண்டாரநாயகே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், பார்லிமென்டில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஷிரானியை, ராஜபக் ஷே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில்,...

ஜனவரி 27, 2015

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை! ஜனாதிபதி உறுதிமொழி !!

இந்த வருட முடிவுக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக உரிய தீர்வு காணப்படும் என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே ஜனாதிபதி  மேற்படி உறுதிமொழியை மன்னார் ஆயரிடம் வழங்கினார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் மகஸின் சிறைச்சாலைக்குச்...

ஜனவரி 26, 2015

எச்சரிக்கை!! பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்;??

விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.   வடக்கில் யுத்தம்  உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.     மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும்  தமிழீழ...

ஜனவரி 22, 2015

மனு தாக்கல் !பயங்கரவாத அமைப்பு என அறிவிக்க வேண்டும்:!!

அமெரிக்க நீதிமன்றத்தில் !!ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என கோரி நியூயார்க் நீதிமன்றத்தில் சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு என்ற அமைப்பு உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சீக்கியர்களுக்கான உரிமைகள் குழு(sfj) என்ற அமைப்பு நியூயார்க்கின் தென் மாவட்டத்தில் உள்ள மத்திய நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது. விரிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில்,  ஆர்.எஸ்.எஸ்  அமைப்பை வெளிநாட்டு...

ஜனவரி 21, 2015

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு; இலங்கை புதிய பிரதமர் ரணில்உறுதி!!!!

தமிழர் பகுதிக்கு அதிகார பகிர்வு அளிக்க 13-வது அரசியல் சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி அளித்துள்ளார். கொழும்பு, கடந்த 1987-ம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியா- இலங்கை இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் கையெழுத்திட்டனர். 13-வது திருத்தம் அதைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது....

ஜனவரி 19, 2015

மீண்டும்விஜலட்சுமி! வருகின்றார் இளங்கோவன்!!

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தூக்கி அடிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பதவிக்கு தற்போதைய ஆளுநர் சந்திரசிறியுடன் பணியாற்றிய ஆளுநர் செயலாளர் இளங்கோவன் அப்பதவிக்கு நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. தூக்கியடிக்கப்பட்ட விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை...

ஜனவரி 16, 2015

ராஜபக்சே கட்சி தலைவர் பதவியையும் மைத்ரிபாலா சிறிசேனாவிடம் பறிகொடுத்தார்

   இலங்கை அதிபர் தேர்தலில் மண்ணைக் கவ்விய மகிந்த ராஜபக்சே, இதுநாள் வரை பொறுப்பேற்றிருந்த இலங்கை சுதந்திரக் கட்சி தலைவர் பதவியை இன்று மைத்ரிபாலா சிறிசேனாவிடம் ஒப்படைத்தார். தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மைத்ரிபாலா சிறிசேனாவை இலங்கை சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் ராஜபக்சே நீக்கினார். அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வியடைந்து, மைத்ரிபாலா சிறிசேனா வெற்றி பெற்றதையடுத்து, இலங்கை...

ஜனவரி 12, 2015

குமரன் பத்மநாதன் பேட்டிஇலங்கையில்தான் இருக்கிறேன்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்தவர் குமரன் பத்மநாதன். இவரை சுருக்கமாக ‘கே.பி.’ என்று அழைப்பார்கள். குமரன் பத்மநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலாளராக இருந்தவர். விடுதலைப்புலிகளின் தலைவரான பிரகாபரனுக்கு வலது கரம் போல் திகழ்ந்த இவர், அந்த இயக்கத்தின் ஆயுத கொள்முதல் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி குமரன் பத்மநாதன் மலேசியாவில் உள்ள ஒரு ஓட்டலில்...

ஜனவரி 08, 2015

மாவட்டங்களிற்கான வாக்களிப்பு சூடுபிடித்தது வீதம் .

 வாக்களிப்பு! யாழ்ப்பாணம் 51%, மன்னார் 50%, கிளிநொச்சி 55.3%, முல்லைதீவு 68%, வவுனியா 60% வடமாகாணத்திற்குட்பட்ட  மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீதம் இன்று மதியத்தின் பின்னர் சூடுபிடித்துள்ளது.இன்று பிற்பகல்; 02.30 மணிவரையிலான காலப்பகுதியினில் பின்வரும் விபரப்படியாக மந்தமாகாவே உள்ளது. குறிப்பாக யாழினில் வாக்களிப்பு வீதம் இந்நிலையினில் இருக்குமானால் அது 60 சதவீதத்தை தாண்டிச்செல்லாலமென தேர்தல் அதிகாரிகள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது. பிந்திய...

ஜனவரி 07, 2015

பிரசார கூட்டத்தில் தமிழனே வெளியே போ: ராஜபக்சே ஆவேசம்

இலங்கை மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர்களை மகிந்த ராஜபக்சே மிரட்டியது தெரிய வந்துள்ளது. மட்டக்களப்பு கூட்டத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது மக்கள் மத்தியில் திடீர் சலசலப்பு எழுந்தது. இது ராஜபக்சேவை கோபம் அடையச் செய்தது. பிரசாரத்தை நிறுத்திய அவர் மைக்கில், ‘‘இது சிங்கள நாடு. நானும் சிங்களன்தான். தமிழா கேட்டுக் கொண்டிரு. முடியா விட்டால் வெளியே போ’’ என்று ஆவேசமாக கூறினார். இதனால் கூட்டத்தில் இருந்த தமிழர்கள் கடும் அதிர்ச்சி...

மஹிந்தவுக்கு ஆதரவாக தமிழ் பெண்கள் பிரசாரம்

கூட்டமைப்பின் கோட்டைகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் பெண்கள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளில் இந்த பிரசார நடவடிக்கைகள்  இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, நொச்சிமுனை பிரதேசங்களில் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வீடு வீடாகச் ஜனாதிபதிக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை...

ஜனவரி 05, 2015

திருமலையில் தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது தாக்குதல்

கடமைக்காகச் சென்ற தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி மீது திருகோணமலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணை செய்யச் சென்ற நபர் மீதே நேற்று (04) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த தேர்தல்கள் ஆணையாளரின் பிரதிநிதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தரும் அவ்விடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்...