வாக்களிப்பு! யாழ்ப்பாணம் 51%, மன்னார் 50%, கிளிநொச்சி 55.3%, முல்லைதீவு 68%, வவுனியா 60%
வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீதம் இன்று மதியத்தின் பின்னர் சூடுபிடித்துள்ளது.இன்று பிற்பகல்; 02.30 மணிவரையிலான காலப்பகுதியினில் பின்வரும் விபரப்படியாக மந்தமாகாவே உள்ளது.
குறிப்பாக யாழினில் வாக்களிப்பு வீதம் இந்நிலையினில் இருக்குமானால் அது 60 சதவீதத்தை தாண்டிச்செல்லாலமென தேர்தல் அதிகாரிகள் தரப்பினில் தெரிவிக்கப்படுகின்றது.
பிந்திய விவரம்
யாழ்ப்பாணம் -51%,
மன்னார் -50%, கிளிநொச்சி -55.3%,
முல்லைதீவு -68%,
வவுனியா -60%,
வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீதம் மதியம் 12 மணிவரை மந்தமாகாவே உள்ளது.குறிப்பாக யாழினில் வாக்களிப்பு வீதம் இந்நிலையினில் இருக்குமானால் 40 சதவீதத்தை தாண்டமாட்டதென எதிர்பார்க்கப்படுகின்றது.
பிந்திய விவரம்
யாழ்ப்பாணம் -25%
மன்னார் -30%கிளிநொச்சி -26%
முல்லைதீவு -19%
வவுனியா -30%
வடக்கு மக்கள் ஆட்சி மாற்றக்கோசத்துடன் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பினில் களமிறங்கியுள்ளனர். எனினும் காலை 11 மணிவரையினில் யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையினில் வடக்கிலும் மக்கள் வரிசைகளில் காத்திருந்து வாக்களிப்பினில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக இருக்கின்றது.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மிகவும் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர். எந்தவொரு அரசியல் அழுத்தமின்றி மக்கள் தாமாக திரண்டு வந்து வாக்களிப்பதனை காணக்கூடியதாக உள்ளது.மாகாணசபை தேர்தலுடன் ஒப்பிடுகையினில் வாக்களிப்பு வீதம் குறைவாக உள்ளபோதும் காலை முதல் வாக்களிப்பினில் ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.குறிப்பாக இளம் சமூகத்தினர் வாக்களிப்பினில் ஆர்வம் கொண்டுள்ளனர்.
பிரதான வீதிகள் வெறிச்சோடியுள்ள போதும் மக்கள் வாக்களிப்பு மைய சூழலினில் அதிகம் காணப்படுகின்றார்கள். எனினும் மயான அமைதி காணப்படுகின்றது.இராணுவத்தினரது பகிரங்க நடமாட்டங்களை காணமுடியாதேயுள்ளது.
எனினும் காலை முதல் பரவலாக தேர்தலை புறக்கணிக்க கோரும் அநாமதேய குறுஞ்செய்திகள் தொலைபேசிகளிற்கு அனுப்பப்பட்டிருந்தது.இராணுவ புலனாய்வு கட்டமைப்பினால் அச்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
அதே போன்று வடமாகாணசபை ஒதுக்கப்பட்ட நிதியினை திருப்பிவிட்டதாக கூறும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தது.எனினும் பரவலாக நேற்றிரவு மஹிந்தவின் எஞ்சிய பேனர்களும் கிழிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
இதனிடையே பருத்தித்துறை அல்வாய் பகுதியில் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் கைக்குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அல்வாய் சிறிலங்கா பாடசாலையில் அமைந்துள்ள வாக்குசாவடிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீதே இனந்தெரியாத நபர்களால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அச்சம் நிலவுவதால் அப்பகுதியில் தற்போது பெருமளவில் பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.ஆயினும் அப்பகுதியினில் படைமுகாம் ஒன்றுமுள்ளது.
வாக்களிப்பில் மக்கள் ஆர்வமற்று இருப்பதால் உந்துமூவுருளிகளில் ஒலிபெருக்கியை கட்டி மக்கள் வாக்களிக்க செல்லுமாறு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்கபாளர்கள் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி :-
வவுனியா நெளுக்குளம் பகுதியில் கைக்குண்டுத் தாக்குதல்!
வடக்கில் மதியம் வரை யாழில் 25%, மன்னாரில் 30%, கிளிநொச்சி 26%, முல்லைதீவு 19%, வவுனியா 30% வாக்குப்பதிவு! (செய்தி இணைப்பு 2)
இறுதி நேர தகிடுதம்களினில் ஆளும் தரப்பு!!
அரியாலை பூம்புகார் பகுதியில் பெற்றோல் குண்டு! (திருத்தம்)
இதுவரை கொழும்பில் 50% வாக்குப் பதிவு!
வடமாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களிற்கான வாக்களிப்பு வீத விவரம்!
யாழ். மாவட்டத்தில் இதுவரை 20 வீதமான வாக்குப்பதிவு! ஒலிபெருக்கி மூலம் வாக்களிக்க செல்லுமாறு அறிவித்தல்!
மரத்தில் ஏறி போராட்டம்! மஹிந்த ராஜபக்க்ஷ வெற்றியீட்டாவிட்டால் தான் மரத்திலிருந்து இறங்க போவதில்லை!
வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் வாக்காளர்களை மிரட்டும் பாணியில் கிரனைட் தாக்குதல்.
யாழ் தென்மராட்சியில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வமற்றநிலையில்!
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தனது வாக்கை அளித்தார்!
தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! அன்னப் பறவைக்கு வாக்களித்தார் சுமந்திரன்!
சிறிலங்கா அதிபர் தேர்தல் பரபரப்பான சூழலில் இன்று நடைபெறுகிறது!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக