ராஜபக்சவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட, இலங்கையின் முதல் பெண் தலைமை நீதிபதியான, ஷிரானி பண்டாரநாயகேவை, மீண்டும் அதே பதவியில் அமர்த்தியுள்ளார், இலங்கையின் புதிய அதிபர், மைத்திரிபால சிறிசேன.
கடந்த 2013ம் ஆண்டில், ஷிரானி பண்டாரநாயகே மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில், பார்லிமென்டில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஷிரானியை, ராஜபக் ஷே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில், ராஜபக் ஷே தோல்வியுற்று, புதிய அதிபராக, மைத்திரிபால சிறிசேன
தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ராஜபக்சவின் பழிவாங்கும் படலத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு, நிவாரணம் அளிக்கும் நடவடிக்கைகளை புதிய அதிபர் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக, அண்மையில், முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த
சரத் பென்சேகாவுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டது. இதே போன்று, தற்போது, ஷிரானி பண்டாரநாயகேவுக்கும், தலைமை நீதிபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று, 43வது தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்ட ஷிரானிக்கு, நீதிமன்ற வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக