18

siruppiddy

பிப்ரவரி 17, 2015

மோடியுடன் ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து மைத்திரிபால பேச்சு!!!

 புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக நடத்தவுள்ள 45 நிமிடப் பேச்சுக்களின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவை அறிக்கை குறித்து விரிவாக ஆராயப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் அறிக்கையை இந்தியாவும் கூட அதிகமாக கவனித்து வருகிறது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், கொழும்புடன் இந்தியா நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி சென்றுள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனியாக – 45 நிமிடங்கள் பேச்சு நடத்தவுள்ளார்.
இதில் இருநாடுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசப்படும்.
அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், மற்றும் சிறிலங்காவுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கை, குறித்தும் இதன் போது ஆராயப்படும்.
அத்துடன், தமிழர் பிரச்சினைக்கு 
விரைவான தீர்வு காண கொழும்பு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தையும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், 
சிறிலங்கா அதிபரிடம், இந்தியப் பிரதமர் வலியுறுத்துவார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும் மார்ச் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கவுள்ளது.
கடந்தவாரம் புதுடெல்லியில் நடந்த உயர்மட்டக் கூட்டங்களில், கலந்துரையாட அட்டவணைப்படுத்தப்பட்ட விடயங்களில் சிறிலங்கா விவகாரமே முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக