வலி. வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் எந்தப் பகுதிகளை நூறுநாள் திட்டத்தினுள் விடுவிக்க முடியும் என்பது தொடர்பில், இராணுவத்தினர் எதிர்வரும் பத்து நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பின்னர் அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என புதிய அரசு தெரிவித்துள்ளது.
வலி.வடக்கின் ஒரு பகுதியை முதல் கட்டமாக இந்த வாரத்துக்குள் விடுவிப்பதற்கு கொழும்பு அரசு கொள்கையளவில் முடிவெடுத்துள்ளது. தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த விடயம் ஆராயப்பட்டு முதலில் சில ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்குத தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவிற்கு முதல் உத்தியோக பூர்வ பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக விடுவிக்கப்படும் கானிகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் எந்தப் பகுதிகளை முதலில் விடுவிப்பது என்ற விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக 3000 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை போன்றவற்றினில் சமிக்ஞை காட்டப்படாவிட்டால் ஜ.தே.க வட-கிழக்கில் பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருக்குமென புலனாய்வு கட்டமைப்புக்கள் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக தெரியவருகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக