18

siruppiddy

பிப்ரவரி 18, 2015

போர்க் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது!!¨¨

ஐ.நா. அறிக்கை தாக்கல் ஆவது தாமதம்: போர்க் குற்றவாளிகள் தப்புவதற்கு வாய்ப்பு அளித்துவிடக் கூடாது சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு வேண்டுகோள்
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை மீதான அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் 6 மாதங்கள் தள்ளி வைத்துள்ளது.
இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பின் (ஆம்னெஸ்டி இன்டர்நேசனல்) இந்திய திட்ட இயக்குனர் ஷெமீர்பாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரின்போது மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அறிக்கையால் தங்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் என பல காலமாக காத்திருந்து வந்துள்ளனர்.
கூடுதல் காலஅவகாசம் எடுத்துக்கொள்வதால்
 மேலும் பலமான அறிக்கை கிடைத்து, அதன்மூலம் தகுந்த நடவடிக்கையை எடுக்க புதிய இலங்கை அரசாங்கம் உறுதி மேற்கொண்டால் மட்டுமே 
தாமதிப்பது நியாயமானதாகும். அதோடு போர்க்காலங்களில் நடைபெற்ற அத்துமீறல்களை இலங்கையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு ஐ.நா.வுடன் இணைந்து ஆய்வுசெய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி நீதியை
 நிலைநாட்ட வேண்டும்.
மேலும் நீதி கிடைப்பதைத் தடுக்க நினைப்பவர்களால், சாட்சி கூற முன்வருபவர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படாத வகையில் பாதுகாப்பளிக்கவும் அவ்வாறு செய்பவர்களை கண்டறியவும் மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக