18

siruppiddy

பிப்ரவரி 06, 2015

தேடப்படும் விடுதலைப்புலி குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை?

  விடுதலைப்புலி குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தியாவால் தேடப்படும் விடுதலை புலிகள் இயக்க  குமரன் பத்மநாபன் வெளிநாடு செல்ல தடை விதித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.
ராஜீவ் கொலையில்
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வந்த போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதில் விடுதலைப்புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் தலைவர் பொறுப்பை குமரன் பத்மநாபன் ஏற்றுக் கொண்டார்.
இவர் அந்த இயக்கத்திற்காக வெளிநாடுகளில் ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் பணிகளை கவனித்து வந்தவர். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலும் அவர் இந்தியாவால் தேடப்பட்டு வந்தார். இதற்காக அவர் சர்வதேச போலீசாரின் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் இடம்பெற்று இருந்தார்.
மலேசியாவில் கைது
இந்த நிலையில் மலேசியாவில் குமரன் பத்மநாபன் கைது செய்யப்பட்டார். அவரை அப்போதைய ராஜபக்சே அரசு இலங்கைக்கு கொண்டு வந்தது. அவர் கைது செய்யப்பட்டது முதல் ராஜபக்சே அரசின் பாதுகாப்பிலேயே இருந்து வந்தார். அதோடு போரினால் பாதிக்கப்பட்டவர்கள், போர் அகதிகள் ஆகியோரை கவனித்துவரும் அரசு சாரா தொண்டு நிறுவனத்துக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
குமரன் பத்மநாபனை மன்னித்து குறைந்த அளவே தண்டனை வழங்கிய ராஜபக்சே அரசுக்கு இலங்கையில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடு செல்ல தடை
இந்தநிலையில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் 10 ஆண்டுகளாக இலங்கையை ஆண்டு வந்த ராஜபக்சே அரசை மக்கள் தூக்கி எறிந்தார்கள். சிறிபாலா தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் இலங்கையின் மார்க்சிஸ்ட் கட்சியான ஜனதா விமுக்தி பிரமுணா இலங்கை கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான குமரன் பத்மநாபனை கைது செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த இலங்கை கோர்ட்டு, நேற்று குமரன் பத்மநாபன் இலங்கையை விட்டு வெளிநாடு செல்லக்கூடாது என்று தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக