இலங்கையின் வன்னியில் நடைபெற்ற போரின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கான மனிதாபிமான அணுகல் மற்றும் நிவாரணங்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியிருந்தாக ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்திருந்தது.
ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதரகம் வொஷிங்டனுக்கு அனுப்பிய இரகசிய கேபிள் உரையாடல் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
எந்த தகுந்த காரணமும் இன்றி வன்னி மோதல்களில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான மருத்துவப் பொருட்கள், குருதி பைகள் போன்றவற்றை விநியோகிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசியமான இந்த உரையாடல் குறிப்பை 2009 ஜூலை 15 ஆம் திகதி ஜெனிவாவுக்கான அமெரிக்காவின் தூதுவர் கிளின்ட் வில்லியம்சன் வொஷிங்டனுக்கு அனுப்பியிருந்தார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான தலைவர் ஜெக் டி மயோ வை அமெரிக்க தூதுவர் போர் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் ஜூலை 9 ஆம் திகதி சந்தித்த போதே இந்த தகவல் அறிந்துள்ளார்.
தேவையான இரத்தம் கிடைக்காத காரணத்தினால் போரில் காயமடைந்த அதிகளவான சிறுவர்களின் உயிரிழப்பை தடுக்க முடியாது போனதாக அமெரிக்க துதூதுவர் தனது தகவலில் உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக