சிறிலங்காவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை மையமாக கொண்டு பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் சனல்-4 தொலைக்காட்சியின் சமீபத்தில் வெளிக்கொணர்ந்த விவரணம் சிறிலங்கா தொடர்பிலான சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்கான அறைகூவலை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
தெரிவித்துள்ளது. தமிழீழத் தாயகப் பெண்களின் ஆத்ம உருவமாக அனைவராலும் நோக்கப்படும் சகோதரி இசைப்பிரியாவினது காட்சிப்பதிவுகள் தமிழ்பெண்கள் மீதான சிங்கள அரசு பயங்கரவாத படையினது
கோரமுகத்தினை மீண்டும் மீண்டும் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சினர் பாலாம்பிகை முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இலங்கைத்தீவில் நடந்தேறிய இறுதி யுத்தகளத்தில் நடந்தேறிய மனிதப்பேரவலம் குறித்து பிரித்தானியாவினை தளமாக கொண்டு இயங்கும் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கிய மற்றுமொரு விவரணப்படம் மானிடநேயத்தை நேசிக்கும் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில்
ஆழ்த்தியுள்ளதோடு கோபத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. போரின் இறுதிக் கட்டங்களில் அப்பாவிப் தமிழ்மக்கள் மீது சிறீலங்கா இழைத்துள்ள போர்க்குற்றங்களில் ஒரு மிகச் சிறிய பகுதியே இவையாகும். இவ் ஆவணப்படத்தினைவிட பிற ஆதாரங்களையும் நாம் இந்த வேளையில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர் இசைப்பிரியா தொடர்பில் வெளிவந்திருந்த ஒளிப்படங்கள் தொடர்பில் சிறிலங்கா அரச கட்டமைப்பு பொய்யான வியாக்கியானங்களை முன்வைத்து வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள சலனக்காட்சிகள் இசைப்பிரியா உயிருடன் சிறிலங்கா இராணுவத்தின் கோரக்கரங்களுக்குள் அகப்படுவதானது சிங்களத்தின் பொய்யான வியாக்கியானங்களுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது.
சிறில்ங்கா இராணுவத்தினரது கோரக்கரங்களுக்குள் அகப்பட்ட அனைத்து தமிழ்பெண்களின் ஒட்டுமொத்த குறியீடாக இசைப்பிரியாக விளங்குகின்றார்.
போரின் இறுதிக்கட்டத்தில் மட்டுமல்ல போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் சூழுகையில் தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவத்தின் அச்சுறுத்தல்களுக்கு தமிழ்பெண்கள் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவைகள் யாவற்றுக்கும் நீதியினையும் பரிகாரத்தினையும் ஏற்படுத்துவதற்கான உகந்த உள்ளக சூழல் இலங்கைக்குள் இல்லை என்பது இலங்கைத்தீவின் கல்வியாளர்கள் மனித உரிமைவாதிகளின் கருத்தாகவுள்ளது.
இந்நிலையில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையே இவற்றுக்கான வழிநிலையாக உள்ளது தென்பது தெளிவாகின்றது. எனவே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடுயாதெனில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையானது போர்க்குற்றங்கள், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றுடன் மட்டும் நின்று விடாது இன அழிப்பையும்
உள்ளடக்க வேண்டும் என்பதேயாகும். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் மற்றும் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக