18

siruppiddy

டிசம்பர் 03, 2013

வான்படை முகாம் தாக்குதல் சந்தேகநபர் சாட்சியம்.

  
ரஷ்யர்களிடம் விசேட கொமாண்டோ பயிற்சி பெற்றேன்!தாம் உள்ளிட்ட சிலருக்கு பத்து ரஷ்யர்களால் விசேட கொமாண்டோ பயிற்சி, வழங்கப்பட்டதாக அநுராதபுரம் வான்படை முகாம் மீதான தாக்குதலின் பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்

வான்படை முகாம் மீதான தரை மற்றும் வான் வழி தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று அநுராதபுரம் விசேட நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன் போது, பிரதான சந்தேக நபரான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ராசவல்லவன் தவரூபன் என்ற குகன் என்பவர் நேரடியாக சாட்சியமளித்தார்.
   
தம்மால் வழங்கப்பட்ட தொலை தொடர்பு தகவல்களுக்கு அமைய யாழ்ப்பாண குடாநாட்டில், சுமார் 100 எறிகணை தாக்குதல்கள் மெற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், தாம் உள்ளிட்ட சிலருக்கு விசேட கொமாண்டோ பயிற்சி, பத்து ரஷ்யர்களால் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அநுராதபுரம் வான் படை முகாமிற்கு தாக்குதலை மேற்கொள்ளும் பொருட்டு

தகவல்களை வழங்க புறப்பட்டுச் சென்ற தங்களுக்கு இரவு நேர தூரபார்வை கண்ணாடி, சைலன்சர் கைத் துப்பாக்கி, தூரநோக்கி, ஜீ.பி.எஸ் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.

அநுராதபுர வான்படை தளத்திற்கு எதிரான தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி படைப்பிரிவினர் வான் மற்றும் தரை வழியாக கடந்த 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலின் போது 14 பாதுகாப்பு படைத்தரப்பினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக