விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கொள்வனவு செயய முயற்சித்த குற்றச்சாட்டுக்காக அமெரிக்காவில் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியிருந்த இந்திய வம்சாவளி சிங்கப்பூர் பிரஜை நாடு கடத்தப்பட்டார்.
இவர் விடுதலைப் புலிகளுக்கு 900,000 டொலர்களுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த
நாடு கடத்தப்பட்ட 51வயதான பால்ராஜ் நாயுடு ராகவன் கடந்த 16 ஆம் திகதியன்று சிங்கப்பூருக்கு வந்தடைந்தார்.
இந்தநிலையில் நாயுடு மீண்டும் அமெரிக்காவுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் சட்டத்தினால் மூடப்பட்டுள்ள. 2006 ஆம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை கப்பல் மூலம் தாம் கொள்வனவு செய்த ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு அனுப்பிவைக்க பால்ராஜ் முயற்சித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டே 4 வருட கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் சீர்திருத்தக் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர் நாயுடு என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக