18

siruppiddy

டிசம்பர் 31, 2013

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு: இந்தியா அச்சம் .

.முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளது.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய அரசு டிசெம்பர் 26 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.

பங்களாதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதிர் முல்லாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடுத்து,கொழும்பில் உள்ள இந்திய தூதுவரலாயம்,ஏனைய துணை தூதுவரயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசு கருதுகிறது.

பங்களாதேசத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1971 ல் நடந்த விடுதலை போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மன்றம் அப்துல் காதிர் முல்லா 344 நபர்களை அப்போது கொன்ற குற்றத்திற்காகவும், ஏனைய குற்றங்களிலும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, டிசெம்பர் 12 ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கலந்துரையாடல்களை பாதுகாப்பு அமைச்சின்

செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டதை  தொடர்ந்தே இந்திய அரசினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக