18

siruppiddy

செப்டம்பர் 28, 2014

மோடி கூட்டமைப்புடன் பேசிய விடயங்கள் மகிந்த ராஜபக்சவுக்கு கூறியுள்ளார்

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிய விடயங்களை சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அறியப்படுத்தியதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  நரேந்திரமோடிக்கும், மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு நியுயோர்க்கில் வைத்து நடைபெற்றிருந்தது.  இதன் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மை சந்தித்து முன்வைத்த விடயங்களை ஜனாதிபதியிடம் நரேந்திர மோடி கூறியுள்ளார்.  அத்துடன்,...

செப்டம்பர் 26, 2014

பெண்ணொருவர் நீதிவேண்டி , ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கை!  தனது தொழில் நியமனத்தில் காட்டப்படும் பாரபட்சம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு, தனக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி – பெண்ணொருவர் ஜனதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கீழுள்ள பாலமுனை நூலகத்தில் கடமையாற்றும் எஸ்.நபீஸதுல் மிஸ்றியா எனும் பெண்ணொருவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கையினை விடுத்துள்ளார். தனக்கு வழங்க வேண்டிய நியமனத்தினை, தன்னை விடவும் குறைந்த தகைமையுடைய ஒருவருக்கு...

செப்டம்பர் 25, 2014

கிணறு ஒன்றில் எறிகணை குண்டுகள் மீட்பு

பகுதியிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து 120 மில்லிமீற்றர் ரக எறிகணைகள் 23, புதன்கிழமை (24) மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் கூறினர். பாழடைந்த கிணற்றை துப்பரவு செய்யும் போது குண்டுகள் இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர்கள், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்கிணங்க இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று எறிகணைகளை மீட்டதாக பொலிஸார் கூறினர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

செப்டம்பர் 23, 2014

வெள்ளவத்தையில்! சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர்

 ,பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் சனல்- 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பணிப்பாளர் நேற்று காலை சிறீலங்கா  வந்தடைந்துள்ளதாக சிங்கள அரச புலனாய்வுத்துறை  தெரிவித்துவருகிறது. மேற்குறித்த சனல்- 4  பணிப்பாளரான ஜோன் ஸ்டெவார்ட் பிரான்ஸிஸ், கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியுள்ளதாகவும் விடுமுறையைக் கழிப்பதற்கு, அவரது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவரது மனைவி...

செப்டம்பர் 22, 2014

உயிர் தப்பியுள்ளா ஊடகவியலாளர் மீது கொலை முயற்சி!!

வன்னியின் சுதந்திர ஊடகவியலாளரான சின்னராசா சிவேந்திரன் நேற்றிரவு கொலை முயற்சி தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இலங்கை பாதுகாப்பு தரப்பினைச் சேர்ந்தவர்களென நம்பப்படும் தாக்குதலாளிகள் அவரை ஏ-9 வீதியினால் பயணித்த வாகனமொன்றுள் தள்ளி வீழ்த்தி கொலை செய்ய முற்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சின்னராசா சிவேந்திரன் (வயது 33) வழமை போலவே கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியிலுள்ள தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களுள் ஒன்றினது பிரதேச...

செப்டம்பர் 21, 2014

உங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்”

 வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சம நேரத்தில் ஆறுதலாக அசைகின்றன). உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர முடியுமா? நான் பாலை. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன் நிலவிய சங்க காலம்...

செப்டம்பர் 19, 2014

அழுத்தங்களைச் சமாளிக்க சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை

தமிழ் நாட்டின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக, இறுதி நேரத்தில் தமிழ் நாட்டு மீனவர்கள் மற்றும் ஈழத் தமிழர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்றை சிறிலங்கா அரசாங்கத்துடன் பாரதீயே ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது. கொழும்பில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாரதீயே ஜனதா கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் சிறிலங்கா வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தமிழ் நாட்டுக்கு பொறுப்பாக இருக்கும் முரளிதர் ராவோ  ஒருவர். இதற்கு எதிராக தமிழ்...

செப்டம்பர் 14, 2014

போராடுவோம் ,திரு வேல்முருகன் அவர்களின் ஐநா பேரணிக்கான அழைப்பு!!

 தாயகத்திலும் , தமிழகத்திலும் , புலத்திலும் ஒன்றிணைந்து போராடுவோம் .விடுதலைப் போராட்டத்துக்கு மாவீரர்களை கொடுத்த தமிழ் உறவுகளே , குடும்பம் குடும்பமாக ஐநா பேரணியில் பெரும்திரளாக கலந்து கொள்ளுங்கள் . எமக்கான தேசத்தை நாம் பெறுவதுக்கு தொடர்ந்து போராடுவோம் என ஐநா பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் அவர்கள். இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் ...

செப்டம்பர் 10, 2014

போராடுங்கள்!நாங்கள் துணையிருப்போம்! மனோ கணேசன்

 'தமிழரசு தலைவராக பதவியேற்றுள்ள மாவை சேனாதிராசாவுக்கு வாழ்த்துக்களுடன் இரண்டு யோசனைகளை முன்வைக்க விரும்புகின்றேன். முதலாவது, வடக்கு, கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம் மக்கள், புலம் பெயர் தமிழர்கள், தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள், சிங்கள முற்போக்கு சக்திகள் ஆகிய ஆறு தரப்பினரையும் கூட்டிணைக்கும் பொறிமுறை ஒன்றை தோற்றுவியுங்கள். இரண்டாவது, 1960 களில் தந்தை செல்வா காலத்தில் தமிழரசு கட்சி முன்னெடுத்த அறவழி போராட்ட வரலாற்றை மீண்டும் இன்று...

செப்டம்பர் 09, 2014

ஆறு வாரத்துக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும்

 இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகள் ஆறு வாரத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஞாயிறன்று முடிவடைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டின் இறுதி நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இந்த நிபந்தனையை விதித்துள்ளார். அப்படியான பேச்சுவார்த்தையின் போது ஒரு சர்வதேச பிரசன்னமும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, ´´பல...

செப்டம்பர் 08, 2014

மாநாட்டில் சிறீலங்காவுக்கு மற்றொரு சவால்!!

இன்று ஆரம்பித்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்கா அரசாங்கம் மற்றுமொரு பாரிய சவாலை எதிர்கொள்ளவுள்ளது. சிறிலங்காவின் சர்வதேச சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் பல அறிக்கை படுத்தவுள்ளன. ஏற்கனவே இந்த முறை சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான வாய்மூல அறிக்கை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் புதிதாக சிறிலங்காவில் இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகளால் காணாமல்...

செப்டம்பர் 05, 2014

சரத் பொன்சேகா சாட்சியமளிக்கத் தயார் !!

  வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு நான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை - மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். தான் தலைமை...

செப்டம்பர் 04, 2014

அரசியல் சாயம் பூசவேண்டாம் வெளிநாட்டு உதவிகளுக்கு

பாதிக்கப்பட்ட எங்களுக்கு அமெரிக்க மக்களால் பல விதமான நன்மைகளைத் தரும் பொழுது அதற்கு எந்தவிதமான அரசியல் நிறங்களையும் பூசி கொச்சைப்படுத்தாது இருக்க வேண்டும் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று காக்கைதீவில் அமெரிக்க உதவியுடன் ஏலவிற்பனை நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றும் போது: அமெரிக்க அரசு எமக்கு பல வழிகளிலும் பல வருடங்களாக உதவிகளைச்...

செப்டம்பர் 01, 2014

மஹிந்தவை கட்டுப்படுத்த முடியும் என பிரபாகரன் கருதினார்–

 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டுப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கருதினார் என முன்னாள் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் கே. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். துரித கதியில் ஈழத்தை எட்டுவதற்கு தேவையான சூழலை அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், பிரபாகரன் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக்...