18

siruppiddy

அக்டோபர் 21, 2014

பாகம்-2 யுத்தத்தின் கடைசிகட்ட நாட்களில் தலைவர் பிரபாகரன் தளபதிகளுடன் நடந்த சந்திப்பு பற்றி, கசிந்த ஓர் சுவாரசியமான தகல்..!!-

  நமக்கு தகவல் கொடுத்தவர் தொடர்ந்து பேசவிடாமல் விடுதலைப் புலிகளின் தளபதி ஜெயம் கையைப் பிடித்து தடுப்பதை கவனித்த பிரபாகரன், “அவரை தடுக்க வேண்டாம்” என்றார். “நீங்கள் சொன்ன விஷயத்தை வேறு சிலரும் சொன்னார்கள். ஆனால், நாம் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் ஒற்றுமைதான் முக்கியம். எமக்கு சர்வதேசத்தின் உதவி தேவை. அப்படியொரு உதவி கிடைக்கும் என்பதற்கு சமிக்கைகள் கிடைத்துள்ளன. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் தத்தமது இஷ்டத்துக்கு ஓட முடியாது. சில நாட்கள் காத்திருக்க வேண்டும்” என்றார். “நீங்கள் சொல்வது சரி. ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இந்த பதட்டமான நேரத்தில் நமது மக்களுக்கே நாம் தண்டனை கொடுப்பது எமக்கு எதிராகவே திரும்ப சந்தர்ப்பம் உண்டு” என்று நமக்கு தகவல் கொடுத்தவர் தெரிவித்ததற்கு
பிரபாகரன், “அப்படியா?” என்றதுடன் நிறுத்திக் கொண்டார். அதன்பின் ஜெயத்திடம் சில தளபதிகளின பெயர்களை குறிப்பிட்டு, அவர்கள் என்ன செய்கிறார்கள், எந்தப் பகுதியில் உள்ளார்கள் என்று கேட்டார். பிரபாகரன் பெயர் குறிப்பிட்டு கேட்டவர்களில் இருவர், ஓரிரு தினங்களுக்கு முன்பே உயிரிழந்திருந்தனர். “அந்த முக்கியமான இருவர் உயிரிழந்ததை பிரபாகரன் தெரிந்து கொள்ளாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது” என்றார் எமக்கு தகவல் தெரிவித்தவர். தொடர்ந்து அவர் கூறுகையில், “இது நடந்த தினங்களில் இயக்கத்துக்கு ஏராளமான அழிவுகள். தினமும் அழிவு செய்திகளாகவே வந்துகொண்டு இருந்தன. தீபன் போன்ற முக்கிய தளபதிகளே உயிரிழந்திருந்தனர். ஒரு நிலைக்குமேல், யார் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் வந்தாலும் யாரும் அதிர்ச்சியடைவதோ, கவலை கொள்வதோ, ஓரிரு
நிமிடங்கள்தான். மறு நிமிடம் வேறு பிரச்னை வந்து சேர்ந்துவிடும். இதனால், பிரபாகரனுக்கு அந்த இருவரும் கொல்லப்பட்டது தெரியாதுகூட போயிருக்கலாம்” என்றார். “அன்றைய தினத்தில் பிரபாகரன், அமெரிக்கர்கள் உதவி செய்வார்கள் என்பதையே பெரிதும் நம்பியிருந்தார். அவருக்கு அப்படியொரு நம்பிக்கையை யாரோ கொடுத்திருக்கிறார்கள்
. அந்த நபர், அல்லது நபர்களுக்கும் பிரபாகரனுக்கும் இடையே, அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் இருந்திருக்கிறார். நடேசன் ஊடாகவே இந்த தொடர்புகள் நடந்திருக்கின்றன” என்றார் எமக்கு தகவல்
கொடுத்தவர். “நீங்கள் அவரை சந்தித்தபோது, பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடன் இருந்தனரா? அவர்கள் பற்றி அவர் ஏதாவது தெரிவித்தாரா?” “இல்லை. தமது குடும்பத்தினர் பற்றி அவர் பேசவே இல்லை. அது அவருடைய வழக்கமும் இல்லை. நான் கேட்கவும் இல்லை” “
யுத்தம் தோல்வியில் முடிகிறது என்பதை உணர்ந்திருந்தாரா? அல்லது தொடர்ந்து யுத்தம் புரிந்து ஜெயிக்க முடியும் என்று நினைத்திருந்தாரா?” “யுத்த நிலைமை புலிகள் இயக்கத்துக்கு மிகவும் பாதகமாகவே இருப்பதை நன்றாகவே தெரிந்து கொண்டிருந்தார். பிரபாகரனுக்கு மட்டுமென்ன, அங்கிருந்த (முள்ளிவாய்க்காலில்) தளபதிகள், முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அது நன்றாக தெரிந்திருந்தது
. எனக்கு தெரிந்து யாருக்கும் இனி யுத்தம் புரிந்து ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை, இருக்கவில்லை. பிரபாகரன் முதல்,
முக்கிய தளபதிகள் வரை, ‘வெளியே இருந்து உதவி வர போகிறது. எந்த நிமிடமும் அந்த அதிசயம் நடைபெறலாம்’ என நம்பிய நிலையிலேயே இருந்தனர். ஆனால், அப்படியொரு அதிசயம் இறுதிவரை நடக்கவேயில்லை” “இந்தியாவில் இருந்து உதவி வரும் என்று பிரபாகரன் நம்பினாரா?” “அது எனக்கு தெரியாது. நான் கடைசியாக பிரபாகரனை சந்தித்தபோது அவர் இந்தியா பற்றி ஏதும் பேசவில்லை. அமெரிக்கா உதவுவது பற்றியே பேசிக்கொண்டு இருந்தார்.
 அதை (அமெரிக்க உதவி வரும் என்பதை) அவர் பெரிதும் நம்பியது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. திரும்ப திரும்ப அதை சொன்னார்” “இதில் என்ன ஆச்சரியம்?” “அது பிரபாகரனின் இயல்பு கிடையாது. ஒரு விஷயம் நடக்கும் என அவர் முழுமையாக நம்பினாலும், அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். ‘இப்படி
நடக்கலாம்’ என்று கோடி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்வார். அது நடந்து முடிந்தபின், “பார்த்தாயா நான் சொன்னேன்” என்று சொல்வதுடன் சரி. அதுதான் அவரது இயல்பு.” “அப்படிப்பட்டவர் அமெரிக்க உதவி வரும் என அடிக்கடி வெளிப்படையாக கூறிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?” “ஒரே காரணம்தான். அந்த நேரத்தில் இயக்கம் தப்புவதற்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை. எல்லா வழிகளும் அடைபட்டு போய் விட்டன. அப்போது தென்பட்ட ஒரே வழி, ‘அமெரிக்கா உதவும்’ என்பதுதான். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அனைவருக்கும் கிடைத்த ஒரேயொரு மரத்துண்டு அதுதான். அந்த நேரத்தில் பிரபாகரன் உட்பட அனைவரும்
 தமக்கு தாமே தைரியம் கொடுப்பதற்கு, அமெரிக்க உதவி வரும் என்று வாயை திறந்து சொல்லிக்கொண்டு இருந்தார்கள்
. நானும் அப்படித்தான் சொல்லிக்கொண்டு இருந்தேன். நாம் எமது வாயால் செல்வதை, எமது காதால் கேட்கும்போது, ஒருவித தைரியம் பிறக்கும் என்ற நிலை” என்றார் அந்த முக்கியஸ்தர். “சரி. புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதற்கு, இலங்கை அரசுக்கு உதவியது அமெரிக்கா என்பது பிரபாகரனுக்கு தெரிந்திருந்ததா? விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அமெரிக்கா, லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகத்தில் ஒரு பிரிவே இருந்தது அவருக்கு தெரிந்திருந்ததா? அதன் பின்னரும், அமெரிக்கா உதவும் என யுத்தத்தின் இறுதி நாட்களில் நம்பினாரா?” “
அந்த விஷயங்கள் அவருக்கு தெரிந்திருந்ததா என்று எனக்கு தெரியாது” “சரி. அந்த சம்பவங்கள் நடந்தபோதும் நீங்கள் வன்னியில் இருந்தீர்கள். யுத்தத்தின் இறுதி நாட்களிலும் வன்னியில் இருந்தீர்கள். பிரபாகரன் உட்பட புலிகள்
இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் பலருடன் நெருக்கமாக இருந்தீர்கள். உங்களுக்கு அந்த விஷயம் தெரியுமா? அதாவது, புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழிப்பதில் அமெரிக்கா (சி.ஐ.ஏ.) செய்த உதவிகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருந்ததா?” “இல்லை. தெரியாது. அது இந்திய உளவுத்துறை ‘ரா’ செய்த வேலை என்ற நம்பிக்கையே நான் உட்பட புலிகளின் மற்ற தளபதிகளுக்கும் இருந்தது. யுத்தம் முடிந்து சில ஆண்டுகளின்பின் உங்கள் இணையதளத்தின்மூலம் இதில் இருந்த அமெரிக்க தொடர்பை தெரிந்து கொண்டேன்” “சரி. அமெரிக்க உதவி வரும் என்று பிரபாகரனுக்கு நடேசன் மூலம் நம்பிக்கை கொடுத்திருந்தது யார் என்பது உங்களுக்கு தெரியுமா?” “தெரியாது. அப்படியான விஷயங்களை பிரபாகரன் வெளியே சொல்வதில்லை.” “நடேசனிடம் கேட்டீர்களா?” “எனக்கும் அவருக்கும் இடையே பெரிய
நெருக்கம் கிடையாது” “யுத்தத்தின் இறுதி நாட்களில், அமெரிக்க உதவி வரும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருந்ததாக சொல்கிறீர்கள். பொதுமக்களை விடுங்கள். புலிகள் இயக்கத்தில் நீங்கள் முக்கிய பிரமுகராக இருந்துள்ளீர்கள். மற்ற தளபதிகளுடன் அடிக்கடி பேசியிருப்பீர்கள். அப்போது, அமெரிக்க உதவி வரும் என்று பிரபாகரனுக்கு நம்பிக்கை ஊட்டிய நபர் யார் என்று மற்ற தளபதிகளில் யாராவது சொல்லியிருப்பார்களே..” “யாரோ அமெரிக்காவில் உள்ள தமிழரின் ஏற்பாடு என்று சொன்னார்கள். அவர் யாரென்று யாரும் சொன்னதில்லை” “சரி. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்த, அங்குள்ள பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய ஒருவர் பற்றி யாராவது பேசினார்களா?” “கலிபோர்னியா என்றால்…” “அந்த மாநிலத்தின் பிரதான நகரங்கள், லாஸ் ஏஞ்சலஸ், சான்
 பிரான்சிஸ்கோ, சியாடில்” “யாரையும் கேள்விப்பட்டதில்லை” “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கலிபோர்னியாவில் இருந்தது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழ்செல்வனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய நபர் இவர். ஒரு விதத்தில் சொன்னால், தமிழ்செல்வனால் பாதிக்கப்பட்டு, தனது உடல் பாகத்தையே இழந்த நபர் இவர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


                             
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக