18

siruppiddy

அக்டோபர் 12, 2014

ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையை ரத்து செய்கிறேன் ஈழக் கோரிக்கையை கைவிடுங்கள்,

 ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
‘ஈழக் கோரிக்கையை குறித்த தரப்பினர் கைவிட்டால் நானும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தத் தயார்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் தமிழ் மக்கள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அண்மையில் வெளிநாடு சென்று இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக