இலங்கை தொடர்பான தனது கடும் நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக தான் உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது இதனை தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோன் கெரியுடனும், இந்திய பிரமருடனும் மேற்கொண்ட பேச்சுக்கள் பயனள்ளதாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் பேசவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மாத்திரம் முன்வைத்தார். தான் ஏன் விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைகளை நிராகரித்தார் என்பதையும் தெளிவுபடுத்தினார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு விரோதமாக செயற்படாது என மோடி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக