18

siruppiddy

நவம்பர் 10, 2014

வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைககளில் இராணுவத்தின்

யாழில் மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இரவு பகல் என்றில்லாது முக்கிய வீதிகள், கோயில்கள், பல்கலைக்கழகம், பாடசாலைகள் போன்ற இடங்களில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டுள்ளனர்.
இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளால் அச்சத்துடன் நடமாடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் யாழ்.பல்கலைக்கழக வாளாக சூழலில் நவம்பர் முதாலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இராணுவத்தின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் நிலைகொண்டும் உள்ளனர்.
இதனால் பல்கலைக்கழகத்திற்கு சென்று வரும் மாணவர்கள் மத்தியில் அச்ச நிலையினை உருவாக்கியுள்ளது.
அத்துடன் யபழ்.பல்கலையில் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்திருப்பது மாணவர் மத்தியிலும் அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும் ஒருவித பயத்தையே ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மாவீரர் நாள் அனுஸ்டிப்பதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கின்ற நிலையிலேயே இராணுவத்தின் பிரசன்னம் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களில் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கெடுபிடிகள் நடக்கலாம் என்றும் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, யாழில் இளைஞர்களும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மாவீரர் நாளை அனுஷ்டிப்பதை தடுப்பதற்கே இவ்வாறான முன் ஆயத்தங்களை அரசாங்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக