கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட தமிழர் ஒருவரை அழைத்து செல்லும்படி ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்திலிருந்து பெற்றோர்களுக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது.
சுன்னாகம் மத்தி தேவாலய வீதியைச் சேர்ந்த க.வைரவநாதன் வயது தற்போது 53 என்பரே 1991-ஆம் ஆண்டு காணாமல் போயிருந்தார்.
உறவினர்களினால் மறக்கப்பட்ட நிலையில் தற்போது அவரை அழைத்து செல்லும்படி நீதிமன்றத்தில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக உறவினர்கள் தொவித்துள்ளார்கள்.
1991-ஆம் ஆண்டு கொழும்பு ஆமர் வீதியில் உள்ள கடையொன்றில் குறிப்பிட்ட நபர் சிப்பந்தியாகக் கடமையாற்றிய வேளையில் கொழும்;பில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபரும் காணாமல் போயிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் குறிப்பிட்ட நபரை எங்கு தேடியும் விபரம் அறியமுடியாத நிலையில் பெற்றோர்களும் இறந்துள்ளார்கள்.
நேற்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்ட நபரை உறவினர்கள் வந்து அழைத்து செல்லும்படி நீதிமன்றத்தினால் கடிதம் அனுப்பபப்பட்டுள்ளது. இதனால் தற்போது உறவினர்கள் குறிப்பிட்ட நபரை அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக